சண்டிவீரன் தலைப்பு ஏன்? இயக்குனர் விளக்கம்

Bookmark and Share

சண்டிவீரன் தலைப்பு ஏன்? இயக்குனர் விளக்கம்

இயக்குனர் பாலாவின் பி ஸ்டூடியோ தயாரிக்கும் படம் சண்டிவீரன். இதில் அதர்வா, ஆனந்தி நடிக்கிறார்கள். கோலிசோடா அருணகிரி இசை அமைத்துள்ளார், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் தலைப்பு மதுரை பகுதியில் சண்டியர் என்பது தஞ்சை பகுதியில் சண்டி வீரன் என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது.

 இதுபற்றி இயக்குனர் சற்குணம் அளித்த விளக்கம் வருமாறு: சண்டி வீரன் என்பது ஜாலிக்காக வைத்த பெயர்தான். இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. முதல் படத்துக்கு களவாணி என்று ஜாலியாக பெயர் வைத்த மாதிரிதான் இதுவும். மதுரை பகுதி சண்டியர் என்ற பெயரின் மருஉருவாக்கம் இந்த பெயர் இல்லை.

சில ஊர்களில் சில பெயர்கள் எப்படியோ வந்து நுழைந்து விடும். தஞ்சை பகுதியில் "சல்லி காசுகூட தரமாட்டேன்" என்று அடிக்கடி சொல்வார்கள். இதில் சல்லி என்பது இந்திச் சொல். இது எப்படி கிராமத்துக்குள் வந்தது என்று யாருக்கும் தெரியாது. அதுமாதிரி சண்டி வீரன் என்பதும் எங்கிருந்தோ வந்த சொல்தான். இதற்கு எந்த பிரச்சினையும் வராது. என்றார். 

 


Post your comment





Related News
சண்டிவீரன் ஜாலியான படமாம்!
பாலா அழைத்ததும் கதை கேட்காமல் சண்டி வீரனில் நடித்தேன்: அதர்வா பேச்சு
ஆகஸ்ட் 7ம் தேதி வருகிறான் சண்டி வீரன்
கயல் ஆனந்தி குழந்தை மாதிரி : அதர்வா
பாலாவுக்காக தள்ளிப்போகும் சண்டிவீரன் ஆடியோ ரிலீஸ்!
அதர்வாவின் சண்டி வீரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
அதர்வாவின் சண்டித்தனம்!
பாலாவின் சண்டி வீரனை வாங்கியது ஸ்ரீ கீரீன்!
மனித ஒழுக்கத்தைப் பற்றிப் பேசும் சண்டியர்!
சரத்குமாருடன் ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் ப்ரியாமணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions