ஆகஸ்ட் 7ம் தேதி வருகிறான் சண்டி வீரன்

Bookmark and Share

ஆகஸ்ட் 7ம் தேதி வருகிறான் சண்டி வீரன்

அதர்வா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சண்டி வீரன்’. இதில் அதர்வாவிற்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். இப்படத்தை ‘களவாணி’, ‘வாகை சூடவா’ ஆகிய படங்களை இயக்கிய சற்குணம் இயக்கியிருக்கிறார். இயக்குனர் பாலா தனது சொந்த நிறுவனமான பி ஸ்டூடியோஸ் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடத்தி முடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வரும் நிலையில், இப்படத்தை ஆகஸ்ட் 7ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தை ஸ்ரீகிரீன் புரோடக்‌ஷன் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் தியேட்டர் உரிமையை பெற்று படத்தை வெளியிடுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions