சண்டிவீரன் ஜாலியான படமாம்!

Bookmark and Share

சண்டிவீரன் ஜாலியான படமாம்!

பரதேசிக்குப்பிறகு அதர்வா நடித்த இரும்புக்குதிரை அவருக்கு அதிர்ச்சி தோல்வியாக அமைந்தது. ஒரு நாளைக்கு ஒரு கதைதான் கேட்பேன். அதையடுத்த நாள் அந்த கதையைப்பற்றி யோசிப்பேன்.

அந்த கதைக்குள் நான் வருகிறேனா இல்லையா என்பதை சுயபரிசோதனை செய்வேன். அது ஓகே ஆனால் அதையடுத்து மீண்டும் அந்த டைரக்டரை அழைத்து அதே கதையை திரும்பவும் கேட்பேன்.

இப்படித்தான் எனது கதை தேர்வு நடக்கிறது என்கிறார் அதர்வா.ஆனால் தற்போது அவர் நடித்து ஆகஸ்ட் 7-ந்தேதிக்கு திரைக்கு வரவிருக்கும் சண்டிவீரன் கதையை அவர் ஒன்றுக்கு பலமுறை கேட்டு முடிவு செய்த கதையல்ல.

டைரக்டர் பாலா கேட்டு ஓகே செய்த கதை. அதனால் அந்த படத்தில் கமிட்டான பிறகுதான் கதையே கேட்டிருக்கிறார் அதர்வா. இதுபற்றி அவர் கூறும்போது, இந்த கதை மீது டைரக்டர் பாலா, சற்குணம் என இரண்டு பேர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

இரண்டு பேருமே பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர்கள் என்பதால் அவர்கள் அந்த கதையை மீது வைத்திருந்த நம்பிக்கையே எனக்கு சண்டிவீரன் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியது என்று சொல்லும் அதர்வா, இந்த படம் தனக்கு திருப்பத்தை தரும் என்று எதிர்பார்ப்பதாக கூறுகிறார்.

மேலும், இந்த படத்துக்காக நான் ரொம்ப ரிஸ்க்கெல்லாம் எடுக்கவில்லை. சாதாரண ஒரு கிராமத்து இளவட்ட பையன் எப்படி இருப்பானோ அப்படித்தான் இருந்திருக்கிறேன்.

அதோடு, நான் செய்யும் சேட்டைகள் ரொம்ப ஜாலியாக இருக்கும் என்று சண்டிவீரன் பற்றி சொல்லும் அதர்வா, இந்த மாதிரியான சம்பவங்கள் கிராமப்புறங்களில் நடக்கிற விசயம்தான். அதனால் பி அண்ட் சி ஏரியா மக்கள் தங்களது ஏரியாவில் நடந்தது போன்ற பீலுடன் இந்த படத்தை பார்ப்பார்கள் என்கிறார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions