மலைவாழ் மக்களின் வாழ்க்கையை படமாக எடுக்கிறார் சங்ககிரி ராஜ்குமார்

Bookmark and Share

மலைவாழ் மக்களின் வாழ்க்கையை படமாக எடுக்கிறார் சங்ககிரி ராஜ்குமார்

வெங்காயம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் சங்ககிரி ராஜ்குமார். மூட நம்பிக்கைகளை அந்தப் படத்தில் சாடியவர் தற்போது மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு நெடும்பா என்ற படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார்.

உலக தொடர்பு இல்லாத மலைகிராம மக்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார்கள். வெளி உலகத்தில் உள்ள ஒரு குழந்தை அவர்கள் கைக்கு கிடைக்கிறது. அந்த குழந்தைக்காக நகரத்திற்கு வரும் அந்த மலைவாழ் மக்கள் தலைவனை இந்த சமூகம் எப்படி எதிர்கொள்கிறது.

நாகரீக மக்கள் அவரை எப்படி பார்க்கிறார்கள் என்கிற கதை. காட் மஸ்ட் பி கிரேஸி என்ற ஹாலிவுட் காமெடி படத்தின் சாயலில் சீரியசான கதையாக உருவாக்கி வருகிறார் ராஜ்குமார்.

இதற்கிடையில் அவர் தனி ஆளாக எல்லா வேலையும் செய்த கின்னஸ் சாதனை படம் ஒன் பாதியில் நிற்கிறது. அதற்கு நிறைய பணம் தேவைப்படுவதால் அதற்கு முன்பாக இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

பல மலை கிராமங்களில் சுற்றித் திரிந்து அதில் ஒரு கிராமத்தை தேர்வு செய்து மலை போர்ஷனை முடித்துவிட்டார். அடுத்த நகர்புற போர்ஷனை சென்னையில் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்.


Post your comment





Related News
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
கமல்ஹாசனை சந்திக்க விரும்புகிறேன்: இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் பேட்டி
பிரபல நடிகரின் மனைவி பர்வதம்மா மரணம்- வருத்தத்தில் திரையுலகினர்
ரஜினியை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தில் இணைந்த எமி ஜாக்சன்- ஆனால்?
இசைக்கலைஞர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.ராஜ்குமார் மீண்டும் தேர்வு
என் தந்தையை கடத்திய வீரப்பனை சினிமாவிலாவது கொல்ல முடிந்ததே - சிவராஜ்குமார் நெகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions