சங்கமித்ரா படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டது ஏன்- ஏ.ஆர். ரகுமான்

Bookmark and Share

சங்கமித்ரா படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டது ஏன்- ஏ.ஆர். ரகுமான்

பிரம்மாண்டத்தின் உச்சமாக பாகுபலி 2 படம் வெளியாகி தற்போது ரூ. 1500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.தற்போது 8வது நூற்றாண்டில் நடக்கும் கற்பனைக் கதையான சங்கமித்ரா படம் சுந்தர். சி இயக்கத்தில் தயாராக இருக்கிறது.

இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்கள் சர்வதேச அளவில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.இப்படத்தில் கமிட்டானது குறித்து முதன்முறையாக ஏ.ஆர். ரகுமான் பேசியுள்ளார்.

அதில் அவர், 6 மாதங்களுக்கு முன் 30 நிமிடங்கள் இந்தப் படத்தின் கதையைக் கேட்டேன். அதுவே நான் ஒப்புக்கொள்ள போதுமானதாக இருந்தது.இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கு நல்ல இசைக்கான ரசனை உள்ளது. சங்கமித்ரா போல சமீபத்தில் என்னை ஈர்த்த கதை எதுவும் இல்லை. இந்தப் படம் சரியான கலைஞர்களின் கைகளில் உள்ளது என்றார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions