சமுத்திரகனிக்கு ஜோடியானார் சங்கவி!

Bookmark and Share

சமுத்திரகனிக்கு ஜோடியானார் சங்கவி!

அமராவதி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சங்கவி. கன்னட நடிகை ஆர்த்திக்கு உறவினரான சங்கவி, மைசூரைச் சேர்ந்தவர்.

இவரது ஒரிஜினல் பெயர் காவ்யா.  அமராவதி படத்தின் தயாரிப்பாளரான சோழாபொன்னுரங்கம் தன் மகள் சங்கவியின் பெயரையே, தன் படத்தில் நடிக்கும் நடிகைக்கும் சூட்டினார். கன்னடத்து காவ்யா.. சங்கவியான கதை இதுதான்.

அமராவதி படத்துக்குப் பிறகு க்ளிக் ஆகாமல் இருந்த சங்கவி, விஜய் உடன் ரசிகன் படத்தில் நடித்தார். புதுமுக நடிகரான விஜய் நடித்த படத்துக்கு  கூட்டம் வராது என்பதை புரிந்து கொண்ட அவரது அப்பா எஸ்.ஏ.சி. ரசிகன் படத்தின் கதாநாயகியான சங்கவியை படு கவர்ச்சியாக நடிக்க வைத்தார்.

அதன் பிறகு முன்னணி கதாநாயகி ஆனார் சங்கவி. ஒருகட்டத்தில் சீக்கிரமே மார்க்கெட் இழந்தார். சினிமாவில் மார்க்கெட் போனாலும் அவ்வப்போது சினி விழாக்களில் பங்கேற்று வந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறார். மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் தயாரிக்கும் கொலஞ்சி  என்ற  படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடிக்கிறார் சங்கவி. தொடர்ந்து அக்கா, அண்ணி, அம்மா வேடங்களில் நடிக்கும் முடிவில் இருக்கிறாராம் சங்கவி.


Post your comment





Related News
தளபதி விஜய் படத்தால் தான் எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது - பிரபல நடிகை ஓபன்டாக்..!
அதுக்காக மட்டும் தான் விஜய் படத்தில் நடிக்க வைத்தார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி.!
விஜய் நம்ம கிட்ட தாங்க இப்படி? சங்கவி ஓபன் டாக்
பிரபல நடிகையால் இயக்குனரிடம் திட்டு வாங்கிய விஜய்!
கொளஞ்சி எனக்கு ரீ-என்ட்ரி தரும் படம் - சங்கவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions