கொளஞ்சி எனக்கு ரீ-என்ட்ரி தரும் படம் - சங்கவி!

Bookmark and Share

கொளஞ்சி எனக்கு ரீ-என்ட்ரி தரும் படம் - சங்கவி!

ஒரு காலத்தில் விஜய், அஜீத்துக்கு ஜோடியாக நடித்தவர் சங்கவி. விஜய்க்கு ஜோடியாக மட்டும் 4 படங்களில் நடித்தார். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சங்கவிக்கு ஒரு கட்டத்தில் மார்க்கெட் இல்லை.

2005ம் ஆண்டு நடித்த ஆணை படம்தான் அவர் கடைசியாக ஹீரோயினாக நடித்தது. அதன் பிறகு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார். ஹீரோயினாக நடித்த சில படங்கள் வெளிவரவில்லை.

சில காலம் சின்னத்திரையிலும் நடித்தார்.  இந்த நிலையில் சங்கவி மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார். மூடர்கூடம் நவீன் தற்போது இயக்கி வரும் படமான கொளஞ்சியில் சமுத்திரகனியின் மனைவியாக நடிக்கிறார். ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள், ஒரு குழந்தை மீது தந்தைக்கு அதிக பாசம், இன்னொரு குழந்தையான கொளஞ்சியை ஏனோ அப்பாவுக்கு பிடிக்கவில்லை.

இப்படியான ஒரு கதையின் வழியாக குழந்தைகளின் உளவியலைச் சொல்கிற படமாக கொளஞ்சி உருவாகி வருகிறது. "கொளஞ்சி எனக்கு ரீ என்ட்ரி தரும் படமாக இருக்கும்.

இனி இதுபோன்ற வலுவான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். வில்லியாகவும் நடிக்க தயார். எனது காதல் பற்றியும் கல்யாணம் பற்றியும் நிறைய செய்திகள் வந்து விட்டது. அவை எதுவுமே உண்மையில்லை. விரைவில் திருமணம் நடக்கும். எல்லோருக்கும் சொல்லித்தான் திருமணம் செய்வேன்" என்கிறார் சங்கவி.


Post your comment





Related News
தளபதி விஜய் படத்தால் தான் எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது - பிரபல நடிகை ஓபன்டாக்..!
அதுக்காக மட்டும் தான் விஜய் படத்தில் நடிக்க வைத்தார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி.!
விஜய் நம்ம கிட்ட தாங்க இப்படி? சங்கவி ஓபன் டாக்
பிரபல நடிகையால் இயக்குனரிடம் திட்டு வாங்கிய விஜய்!
சமுத்திரகனிக்கு ஜோடியானார் சங்கவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions