மை டியர் குட்டிச்சாத்தான், அஞ்சலி வரிசையில் இந்த சங்குசக்கரம் - தயாரிப்பாளர் கே.சதிஷ் வெளியிட்ட தகவல்


தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான முழுநீள படம் வருவது மிக குறைவாக தான் காணமுடிகிறது. கடைசியாக பசங்க2 குழந்தைகள் மட்டுமில்லாமல் மக்களிடமும் நல்ல பெயரை எடுத்த படம்.
அந்த வரிசையில் சங்குசக்கரம் என்ற படம் குழந்தைகளுக்காக மட்டுமில்லாமல் குடும்பமாக கொண்டாடும் வகையில் பான்றசி கலந்த படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன். இவர் குழந்தைகளை ஆபத்தில் இருந்து காப்பாற்றப் போகிறாரா அல்லது அந்த ஆபத்தே இவர்தானா என்பதுதான் சஸ்பென்ஸ்.
இப்படத்தின் கதை களம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் கே.சதிஷ். எப்படி மை டியர் குட்டிச்சாத்தான் , அஞ்சலி போன்ற படங்கள் ஒரு முத்திரை பதித்ததோ அதே போல் இந்த படம் இருக்கும் என்கிறார்.
இப்படத்தை வரும் மே மாதம் லீவு நாட்களில் வெளியிட முடிவுசெய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தன்னால் முடிந்த ஆதரவையோ , உதவியோ எப்போதுமே கொடுக்க கூடியவர் தயாரிப்பாளர் கே.சதிஷ் .
Post your comment