ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள சங்குசக்கரம் ஃபர்ஸ்ட் லுக்!

Bookmark and Share

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள சங்குசக்கரம் ஃபர்ஸ்ட் லுக்!

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன், சங்குசக்கரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். ராஜ்குமார் மற்றும் சதீஷ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தை அறிமுக இயக்குனர் மாரிசன் இயக்கியுள்ளார்.

இவர் சந்திரமுகி, குசேலன் படங்களில் பி. வாசுவிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜில் ஜங் ஜக் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

அதைதொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இணையத்தள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி அமரன் இதை வெளியிட்டுள்ளனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions