'அந்த' நடிகரை காதலித்தாரா சானியா மிர்சா?

Bookmark and Share

'அந்த' நடிகரை காதலித்தாரா சானியா மிர்சா?

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரை காதலித்தீர்களா என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் கேட்டார். 

பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் நடத்தி வரும் காபி வித் கரண் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியில் கரண் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். சானியாவுடன் அவரது தோழியும் பாலிவுட் இயக்குனருமான ஃபரா கானும் கலந்து கொண்டார்.

அது எப்படி திரையுலகில் ஒரு ஹீரோ கூட உங்களை காதலிக்கவில்லை என்று கரண் சானியாவிடம் கேட்க அவரோ தெரியவில்லை, நடக்கவில்லை என்றார்.

நீங்களும், நடிகர் ஷாஹித் கபூரும் காதலித்ததாக ஒரு காலத்தில் கிசுகிசுக்கப்பட்டதே, உண்மையா என்று கரண் கேட்டார். நினைவில்லை. நான் அதிகமாக பயணம் செய்வதால் எதுவும் நடக்கவில்லை என்றார் சானியா.

ஷாஹித் கபூரும், நடிகை கரீனா கபூரும் காதலித்து வந்தனர். அவர்கள் பிரிந்த பிறகு ஷாஹித் சானியாவை காதலித்ததாக 8 ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்டதை தான் கரண் கேட்டுள்ளார்.

சானியா மிர்சா பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக உள்ளார். டென்னிஸிலும் அசத்தி வருகிறார்.


Post your comment





Related News
மும்பையை கலக்கிய பிரபல தமிழ் தாதா ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாற்றில் ரஜினி நடிக்கிறாரா?
சானியா மிர்சா தங்கை திருமணத்தில் கலந்துகொண்டு நடனமாடி அசத்திய பிரபல நடிகர்!
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கை படமாகிறது
சானியதாரா வாய்ப்பை தட்டிப்பறித்த சுஷ்மாராஜ்!
சானியா பார்ட்டியில் லக்ஷ்மி மஞ்சு
சானியா மிர்சாவாகும் தீபிகா படுகோனே
சானியா மிர்சாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் வாழ்த்து
தெலுங்கு படத்தை தயாரி்க்கிறார் தியா மிர்சா
தகடு தகடுவை எதிர்பார்க்கும் சானியதாரா!
தெலுங்கு சினிமாவில் என்ட்ரியான சானியதாரா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions