சானியதாரா வாய்ப்பை தட்டிப்பறித்த சுஷ்மாராஜ்!

Bookmark and Share

சானியதாரா வாய்ப்பை தட்டிப்பறித்த சுஷ்மாராஜ்!

ஒருவர் மீது இருவர் சாய்ந்து, பனிவிழும் மலர்வனம், சும்மா நச்சுன்னு இருக்கு, அது வேற இது வேற உள்பட சில படங்களில் நடித்தவர் சானியதாரா. தெலுங்கு நடிகையான இவர், அடுத்து மேல்தட்டு ஹீரோக்களுடன் நடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே ஒரு மெகா பட்ஜெட் படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தாராம். அதையடுத்து, இவரையே அந்த படத்தில் நடிக்க வைப்பதாக சொல்லி, போட்டோ செஷனும் நடத்தப்பட்டதாம்.

அதில் ஓகே ஆன சானியதாரா அடுத்த மாதம் அப்படத்தில் நடிக்க இருந்தாராம். இந்த நேரத்தில், தற்போது விஜய் ஆண்டனியின் இந்தியா பாகிஸ்தான் படத்தில் நடித்துள்ள சுஷ்மாராஜின் நடிப்பு அந்த படத்தின் இயக்குனரை கவர்ந்து விட, சானியதாராவை நீக்கிவிட்டு சுஷ்மாராஜை புக் பண்ணிவிட்டாராம்.

விசயமறிந்து அதிர்ச்சியடைந்த சானியதாரா, இந்த படத்துக்காக மாதக்கணக்கில் காத்திருந்த என்னை இப்படி மோசம் செய்து விட்டீர்களே என்று அந்த நிறுவனத்திடம் புலம்பிக்கொண்டிருக்கிறாராம். 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions