நன்னடத்தையால் முன்கூட்டியே விடுதலையாகும் நடிகர் சஞ்சய்தத்!

Bookmark and Share

நன்னடத்தையால் முன்கூட்டியே விடுதலையாகும்  நடிகர் சஞ்சய்தத்!

கடந்த 1993–ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுதங்கள் பதுக்கியதாக நடிகர் சஞ்சய்தத் மீது குற்றம் சாட்டப்பட்டு மும்பை தடா கோர்ட்டு அவருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. 

கடந்த 2007–ம் ஆண்டு ஜூலை மாதம் 31–ந்தேதி தீர்ப்பு கூறியது. இதையடுத்து சஞ்சய்தத் ஜெயிலில் அடைக்கப்பட்டார். தண்டனை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார்.ஜாமீன் மனுவும் தாக்கல் செய்தார். 1½ ஆண்டுகள் ஜெயிலில் இருந்த பின்பு சஞ்சய்தத்துக்கு ஜாமீன் கிடைத்தது. 

இந்த நிலையில் அப்பீல் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தி அவரது தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் கடந்த 2013–ம் ஆண்டு மார்ச் மாதம் 21–ந் தேதி உத்தரவிட்டது. 

சஞ்சய்தத் ஏற்கனவே 2007–08ம் ஆண்டுகளில் 18 மாதங்கள் ஜெயில் தண்டனை அனுபவித்து விட்டதால் மீதம் உள்ள 3½ ஆண்டுகளை ஜெயிலில் கழிக்க வேண்டும் என்பதால் தீர்ப்பு வெளியான மறுநாளே சஞ்சய்தத் புனே எரவாடா ஜெயிலில் அடைக்கப்பட்டார். 

சஞ்சய்தத்தின் தண்டனை காலம் வருகிற 2016–ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. ஆனால் ஜெயிலில் அவரது நன்னடத்தையுடன் நடந்து கொண்டு இருப்பதால் முன் கூட்டியே வருகிற பிப்ரவரி மாதம் 25–ந்தேதியே விடுதலையாகிறார். 


Post your comment





Related News
தனுஸ்ரீ தத்தாவிடம் 25 பைசா இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை ராக்கி சாவந்த்
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
மொத்தம் இத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா சஞ்சய் தத்? - அதிர்ச்சியான ரசிகர்கள்
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
மகள் வயது பெண்ணை இப்படியா அசிங்கமாக பேசுவது? - பொன்னம்பலம் வார்த்தையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை
பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம்! காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ
விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்!
பிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions