3 நாட்களுக்கு முன்னதாகவே பிறந்தநாள் கொண்டாடிய சஞ்சனாசிங்!

Bookmark and Share

3 நாட்களுக்கு முன்னதாகவே பிறந்தநாள் கொண்டாடிய சஞ்சனாசிங்!

ரேணிகுண்டா, மீகாமன், உட்பட ஏகப்பட்ட படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். இவற்றில் ரேணிகுண்டா படத்தில் மட்டும் குணசித்திர வேடத்தில் நடித்தார். அதன் பிறகு கவர்ச்சி நடனம் ஆடும் வேடங்கள் தேடிவர, ஐட்டம் டான்ஸ் நடிகையாகிவிட்டார்.

சஞ்சனா சிங்க கடைசியாக நடித்த மீகாமன் படத்தில் அவரது வேடம் பேசப்பட்டது. மீகாமன் படத்தை தொடர்ந்து இரண்டு தமிழ்ப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சஞ்சனா சிங், தவிர தொடா இஷ் என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறாராம்! இதிலும் கவர்ச்சி நடனம்தான் ஆடுகிறார்.

சஞ்சனாசிங்குக்கு வருகிற 23-ஆம் தேதி பிறந்த நாள்! அன்றைய தினம் தன் குடும்ப உறுப்பினர்களுடன் கோவாவில் உள்ள ரிசார்ட்டில் தனது பிறந்த நாளை படு விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளார் சஞ்சனா சிங்!  அதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற விரும்பிய சஞ்சனா சிங், இன்று காலை சென்னை, வடபழனியிலுள்ள ஆர்.கே.வி.ஸ்டூடியோவில் கேக்கை வெட்டி பத்திரிகையாளர்களின் வாழ்த்துக்களைப் பெற்றார்.

அதன் பிறகு சென்னை ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள லிட்டில் ஃப்ளவர் ஆதரவற்றோர் பள்ளியிலுள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கியதோடு, அங்குள்ள குழந்தைகளுடன் நேரம் செலவிட்டார். 


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions