இன்டர்நெட்டில் நடிகைகள் குளியல் காட்சி : சஞ்சனா சிங் பாய்ச்சல்

Bookmark and Share

இன்டர்நெட்டில் நடிகைகள் குளியல் காட்சி : சஞ்சனா சிங் பாய்ச்சல்

சில்க ஸ்மிதா, அனுராதா என கவர்ச்சி ஆட்டத்துக்கென்றே 89, 90 களில் கிளாமர் நடிகைகள் இருந்தனர். இப்போதெல்லாம் ஹீரோயின்களே கவர்ச்சி, குத்து பாடலுக்கு ஆடத் தயாராகிவிட்டதால் கிளாமர் நடிகைகள் என்ற பிரிவே காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

கறிவேப்பிலைபோல் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கும் ஒன்றிரண்டுபேரில் சஞ்சனா சிங் ஒருவர். ரேணிகுண்டா, கோ, அஞ்சான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் கிளாமர் ஆட்டம் போட்டவர்.

அவர் கூறியது:கவர்ச்சியை மட்டுமே நம்பிக்கொண்டிருந்தால் இப்போது எடுபடாது என்பதை புரிந்துவைத்திருக்கிறேன். அதனால்தான் கவர்ச்சியாக நடிக்க வாய்ப்பு வந்தாலும் அதில் கொஞ்சம் நடிப்புக்கும் தீனி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

சமீபத்தில் வெளியான மீகாமன் படத்தில் கால்கேர்ளாக நடித்ததில் பாராட்டு கிடைத்தது. ‘நமீதாவுக்கு போட்டியாக வந்திருக்கிறீர்களா?'  என்கிறார்கள். அவர் என்னுடைய சீனியர். அவருக்கென்று ஒரு பாணி இருக்கிறது.

அதை நான் பின்பற்றுவதில்லை. எனக்கென்று ஒரு பாணியை வகுத்துக்கொண்டால்தான் எனக்கு பெயர் கிடைக்கும். இல்லாவிட்டால் நமீதா மாதிரி நடித்திருக்கிறார் என்று கூறிவிடுவார்கள்.

எந்த நடிகைக்கும் தனித்தன்மை முக்கியம் என்று கருதுகிறேன். சமீபகாலமாக இணைய தள வரம்பு மீறல்கள் அதிகரித்துவிட்டது. நடிகைகளின் ஆபாச படங்களை மார்பிங் செய்தும், குளிக்கும் காட்சிகளையும் திருட்டுத்தனமாக படமாக்கி வெளியிடுகிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் அவர்களின் அக்கா, தங்கை, மனைவி பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கள் குளிக்கும்போது படம் எடுத்து வெளியிட்டால் அவர்கள் மனது என்ன பாடுபடும். மற்றவர்களுக்கும் அப்படித்தானே இருக்கும்.இவ்வாறு சஞ்சனா சிங் கூறினார்.


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions