கோவாவில் பிறந்த நாள் கொண்டாட்டம்: ஜெயிக்காமல் ஓய மாட்டேன் சஞ்சனா சூளுரை

Bookmark and Share

கோவாவில் பிறந்த நாள் கொண்டாட்டம்: ஜெயிக்காமல் ஓய மாட்டேன் சஞ்சனா சூளுரை

ரேணிகுண்டா படத்தின் மூலம் அறிமுகமானவர் சஞ்சனா சிங். அதற்பிறகு பல படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்தார். ஒரு பாட்டுக்கு ஆடினார். தற்போது ஜெயம் ரவி நடிக்கும், 'தனி ஒருவன், மானே தேனே பேயே, தப்பு தாளங்கள், வெயிலோடு விளையாடு, அமளி துமளி, ரெண்டாவது படம், காதல் பாதை, இரவும் பகலும், வெற்றி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சஞ்சான சிங்கிற்கு இன்று பிறந்தநாள். கோவாவில் தனது குடும்பத்திடருன் பிறந்த நாளை கொண்டாடினார். தனது பிறந்த நாளையொட்டி சஞ்சனா சிங் கூறியதாவது: மும்பையில் மாடலாக என் வாழ்க்கையை துவக்கினேன்.

ரேணிகுண்டா படத்திற்கு ஹீரோயின் செலக்ஷன் நடந்தபோது நானும் சென்றேன். என்னை பார்த்த இயக்குனர் பன்னீர் செல்வம், என் படத்தின் நாயகி 16 வயது பெண் நீங்கள் 20 வயதில் இருக்கிறீர்கள், ஹீரோவும் சின்ன பையன் அடுத்த படத்தில் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு படத்தில் இன்னோர் கேரக்டர் இருக்கிறது.

ஹீரோயினின் அக்கா பாலியல் தொழிலாளி கேரக்டர் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நடிக்கலாம் என்றார். எப்படி நடித்தாலும் நடிப்புதானே என்று நடிக்க ஒப்புக் கொண்டேன்.

அந்த கேரக்டர் எனக்கு பெயரை வாங்கித் தந்தாலும் ஹீரோயின் ஆவதற்கு தடையாக அமைந்து விட்டது. அதன்பிறகு அதே மாதிரியான கேரக்டர்கள்தான் வந்தது. சரி நடித்துக் கொண்டே போராடுவோம் என்று நடிக்க ஆரம்பித்தேன்.

ரகளபுரம் மாதிரியான சில படங்களில் செகண்ட் ஹீரோயினியாக நடித்தேன். இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் ஹீரோயினியாக நடிக்க இருக்கிறேன். அதற்கான அறிவிப்பு வரும். அடுத்த பிறந்த நாளுக்குள் ஹீரோயினாக ஜெயித்து காட்டுவேன். என்கிறார் சஞ்சனா சிங்.


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions