இந்திப் படத்தில் நடிக்கிறார் சஞ்சனா சிங்

Bookmark and Share

இந்திப் படத்தில் நடிக்கிறார் சஞ்சனா சிங்

மும்மை மாடலாக இருந்து தமிழ் படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் சென்னை வந்தவர் சஞ்சனாசிங். ரேணிகுண்டா படத்தில் ஹீரோயினின் அக்காவாகவும், பாலியல் தொழிலாளியாகவும் நடித்தார்.

அதன் பிறகு கோ, மயங்கினேன் தயங்கினேன், மறுபடியும் ஒரு காதல் படங்களில் ஒரு பாட்டுக்கு நடனமாடினார் ரகளைபுரம், அஞ்சான், வெயிலோடு விளையாடு, படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். வெளிவர இருக்கும் ரெண்டாவது படத்தில் வில்லியாக நடித்துள்ளார். காதல் பாதை, இரவும் பகலும், தப்பு தாளங்கள், தனியொருவன் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தோடா லத்ப் தோடா இஷாக் என்ற இந்திப் படத்தில் நடிக்கிறார் சஞ்சனாசிங். அதில் நடன மங்கையாக நடிக்கும் சஞ்சனா ஒரு பாட்டுக்கும் கவர்ச்சி ஆட்டம் ஆடுகிறார்.

படத்தை சச்சின் குப்தா இயக்கி உள்ளார். ராஜ்பால் யாதவ், ஹிட்டன் தேஜ்வானி, சஞ்சய் மிஸ்ரா, நேகா பவார், ராகேஷ் பேடி நடிக்கிறார்கள், விக்ரம் குஜாரியா இசை அமைக்கிறார்.

இரண்டு இளைஞர்கள் வேலை எதுவுமின்றி தினமும் பார்ட்டி, பங்ஷன். பெண்களை பிரண்டு பிடித்து ஜாலியாக இருத்தல் என வாழ்கிறார்கள். திடீரென ஞானோதயம் வந்து வேலை தேடுகிறார்கள்.

எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. அவமானப்படுத்தி அனுப்புகிறார்கள். கடைசியில் அவர்களுக்கு ஒரு பியூட்டி பார்லரில் வேலை கிடைக்கிறது. அதனை இரண்டு அழகான பெண்கள் நடத்துகிறார்கள்.

இவர்களுக்கு ஜாக்பாட் அடித்த மாதிரி இருந்தது. ஆனால் அதன் பிறகுதான் இவர்களுக்கு பல பல்புகளும், ஆப்புகளும் விழுகிறது. இப்படி போகும் செக்சுவல் காமெடி படம் இது. சஞ்சனாசிங்கை மையப்படுத்தி தமிழில் டப் செய்து வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions