பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விடுதலைக்கான ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விடுதலைக்கான ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிக்கு உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, தண்டனை பெற்று புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வரும் பிப்ரவரி 27 ம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார்.

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக ஏகே-56 ரக துப்பாக்கிகள் வைத்திருந்ததாக சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் சஞ்சய் தத் 1996-ல் கைது செய்யப்பட்டார்.

அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்படுவதற்கு முன் 18 மாதங்கள் சிறையில் இருந்தார். இவ்வழக்கில் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை உச்ச நீதிமன்றம் கடந்த 2013, மார்ச் மாதம் உறுதி செய்தது.

சஞ்சய் தத் ஏற்கெனவே 18 மாதங்கள் சிறையில் கழித்து விட்டதால் எஞ்சிய 42 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் புனேவில் உள்ள எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சஞ்சய் தத்தின் எஞ்சிய தண்டனைக் காலம் 2016, நவம்பர் வரை உள்ளது. என்றாலும் நன்னடத்தை அடிப்படையில் அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார், இதுகுறித்து சிறை அதிகாரி உரிய நேரத்தில் பரிசீலனை செய்வார் என்று ஏற்கெனவே தகவல் வெளியாகியது.

சஞ்சய் தத்தின் தண்டனை காலம் நிறைவடைய இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், அவர் வருகிற பிப்ரவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
மொத்தம் இத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா சஞ்சய் தத்? - அதிர்ச்சியான ரசிகர்கள்
விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
மும்பை கோர்ட்டில் நடிகர் சஞ்சய்தத் ஆஜர் - பிடிவாரண்டு ரத்து
கோர்ட்டில் ஆஜராக தவறிய நடிகர் சஞ்சய் தத்துக்கு பிடிவாரண்டு
பிரபல இசையமைப்பாளர் விஷால் விவாகரத்து! தொடரும் பிரிவுகள்
இந்த இயக்குனரை செருப்பால் அடித்தால் ரூ 10 ஆயிரம் பரிசு
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரை அடித்து விரட்டிய பொதுமக்கள்- ஏன் தெரியுமா?
நடிகர் சஞ்சய் தத்தை கவிஞராக மாற்றிய சிறை வாழ்க்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions