ஜெயிலில் 10 கதைகளை எழுதிய நடிகர் சஞ்சய்தத்!

Bookmark and Share

 ஜெயிலில் 10 கதைகளை எழுதிய நடிகர் சஞ்சய்தத்!

நட்சத்திர தம்பதி சுனில்தத்-நர்கீஸ் மகனாக பிறந்து இந்தி திரையுலகை கலக்கிய சஞ்சய்தத்தின் சொந்த வாழ்க்கை துயரம் நிறைந்தது. முன்னணி கதாநாயகனாக இருந்த போது 1993-ல் மும்பை வெடிகுண்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். 

18 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வந்து சில மாதங்கள் குடும்பத்தினருடன் இருந்தார். 2007-ல் மீண்டும் இந்த வழக்கில் 6 வருடங்கள் சிறை தண்டனை பெற்று ஜெயிலுக்கு போனார்.

சுப்ரீம் கோர்ட்டு தண்டனையை 5 வருடமாக குறைத்தது. தற்போது ஜெயிலில் தண்டனையை அனுபவித்து வரும் சஞ்சய்தத்தை, நன்னடத்தையை கருதி அடுத்த மாதமே விடுதலை செய்கின்றனர். 

இது இந்தி பட உலகினரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் விடுதலையை கொண்டாட தயாராகி வருகிறார்கள். ஜெயில் வாழ்க்கை சஞ்சய்தத்தின் சிந்தனை, செயல்களை ரொம்பவே மாற்றி இருக்கிறது.

ஜெயிலுக்குள் பேப்பர் பைகள் செய்யும் வேலை பார்த்தார். இதற்காக தினமும் அவருக்கு கூலியாக ரூ.25 கொடுத்தனர். விரும்பிய உணவுகளை சாப்பிட முடியவில்லை. 
இதனால் 18 கிலோ எடை குறைந்துள்ளார்.

ஜெயிலுக்குள் சினிமாவுக்கான 10 கதைகளை எழுதி முடித்துள்ளார். விடுதலையானதும் அவற்றில் ஒரு கதையில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையில் சஞ்சய்தத்தை வைத்து முன்னாபாய் எம்.பி.பி.எஸ் படத்தையும் அதன் இரண்டாம் பாகத்தையும் தயாரித்து வசூலை அள்ளிய தயாரிப்பாளர் விதுவினோத் சோப்ரா இதன் மூன்றாம் பாகத்துக்கான கதையை தயார் செய்து கொண்டு அவரது விடுதலைக்காக காத்திருக்கிறார்.

சஞ்சய்தத் வெளியே வந்ததும் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அவர் கூறினார். முன்னா பாய் படம்தான் தமிழில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்தது.


Post your comment





Related News
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
மொத்தம் இத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா சஞ்சய் தத்? - அதிர்ச்சியான ரசிகர்கள்
விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
மும்பை கோர்ட்டில் நடிகர் சஞ்சய்தத் ஆஜர் - பிடிவாரண்டு ரத்து
கோர்ட்டில் ஆஜராக தவறிய நடிகர் சஞ்சய் தத்துக்கு பிடிவாரண்டு
பிரபல இசையமைப்பாளர் விஷால் விவாகரத்து! தொடரும் பிரிவுகள்
இந்த இயக்குனரை செருப்பால் அடித்தால் ரூ 10 ஆயிரம் பரிசு
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரை அடித்து விரட்டிய பொதுமக்கள்- ஏன் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions