விடுதலையானார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்

Bookmark and Share

விடுதலையானார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்

மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு நடந்த சங்கிலி தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக இந்தி நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு தடா கோர்ட்டு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. கடந்த 2013–ம் ஆண்டு மார்ச் மாதம் அவரது சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு 5 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு அளித்தது. 

ஏற்கனவே சிறையில் 1½ ஆண்டை கழித்த நிலையில், எஞ்சிய 3½ ஆண்டுகள் சிறை தண்டனைக்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அவர் மீண்டும் சரண் அடைந்தார். புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று மகாராஷ்டிர அரசு சமீபத்தில் அறிவித்தது. 

அதன்படி, சிறையில் அடைக்கப்பட்ட 56 வயது நடிகர் சஞ்சய் தத் இன்று (வியாழக்கிழமை) காலை விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

நீல நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் பேண்டுடன் இன்று காலையில் சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறையில் இருந்து தனது கார் மூலம் லோஹேகான் விமான நிலையம் சென்ற அவர் அங்கிருந்து மும்பை செல்கிறார். 

சிறையில் இருந்து வெளியே வந்த அவர் சிறை கட்டடத்திற்கு மேலே பறக்கவிடப்பட்டிருந்த மூவர்ண தேசிய கொடிக்கு தன்னுடைய மரியாதையை செலுத்தினார். 

சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா மற்றும் பாலிவுட் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி ஆகியோர் சிறையில் இருந்து அவருடன் காரில் சென்றனர்.


Post your comment





Related News
மொத்தம் இத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா சஞ்சய் தத்? - அதிர்ச்சியான ரசிகர்கள்
விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
மும்பை கோர்ட்டில் நடிகர் சஞ்சய்தத் ஆஜர் - பிடிவாரண்டு ரத்து
கோர்ட்டில் ஆஜராக தவறிய நடிகர் சஞ்சய் தத்துக்கு பிடிவாரண்டு
இந்த இயக்குனரை செருப்பால் அடித்தால் ரூ 10 ஆயிரம் பரிசு
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரை அடித்து விரட்டிய பொதுமக்கள்- ஏன் தெரியுமா?
நடிகர் சஞ்சய் தத்தை கவிஞராக மாற்றிய சிறை வாழ்க்கை
சஞ்சய் தத்தை படம் பிடிக்க முயன்ற நிருபர் மீது போலீசார் தாக்குதல்
ஜெயிலில் 10 கதைகளை எழுதிய நடிகர் சஞ்சய்தத்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions