பரோலில் கூடுதலாக 2 நாள் தங்கியதால் நடிகர் சஞ்சய்தத்தின் 10 நாள் விடுமுறை குறைப்பு

Bookmark and Share

பரோலில் கூடுதலாக 2 நாள் தங்கியதால் நடிகர் சஞ்சய்தத்தின் 10 நாள் விடுமுறை குறைப்பு

நடிகர் சஞ்சய்தத் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்று புனே எரவாடா ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம் சஞ்சய்தத் பரோலில் மும்பை வந்தார். அவருக்கு 14 நாள் பரோல் அனுமதிக்கப்பட்டது. ஜனவரி 8–ந் தேதி அவர் ஜெயிலுக்கு திரும்பி இருக்க வேண்டும்.

பரோலை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று சஞ்சய்தத் மனு செய்து இருந்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த மராட்டிய உள்துறை அமைச்சகம் ஜனவரி 10–ந் தேதி தான் கோரிக்கையை நிராகரித்தது. அதுவரை சஞ்சய்தத் மும்பையிலேயே தங்கி விட்டார். கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்பு தான் சஞ்சய்தத் எரவாடா ஜெயிலுக்கு சென்றார்.

இதற்கிடையே சஞ்சய்தத் கூடுதலாக 2 நாட்கள் தங்கியது பற்றி மராட்டிய சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மீரா போர்வாங்கர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையின் முடிவில் சஞ்சய்தத் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

வழக்கமாக சிறை கைதிகள் பரோலில் வந்த போது கூடுதலாக ஒரு நாள் தங்கினால் ஒரு நாளைக்கு 5 நாள் விடுமுறை ரத்து செய்யப்படும். அதன்படி சஞ்சய்தத்துக்கான விடுமுறையில் 10 நாட்கள் குறைத்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Post your comment





Related News
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
மொத்தம் இத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா சஞ்சய் தத்? - அதிர்ச்சியான ரசிகர்கள்
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
மகள் வயது பெண்ணை இப்படியா அசிங்கமாக பேசுவது? - பொன்னம்பலம் வார்த்தையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை
பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம்! காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ
விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்!
பிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், இதோ
விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions