சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்திற்கு யு சான்றிதழ்

Bookmark and Share

சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்திற்கு யு சான்றிதழ்

விஜய்காந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘சகாப்தம்’. இதில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக நேஹாஹிங், சுப்ராஜயப்பா நடிக்கின்றனர். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் திரையுலகின் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு மினி ஹெலிகாப்டர் மூலம் சி.டி.யை வெளியிட்டனர்.

இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் நிலையில், இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியிருந்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் தீவிரம் காண்பித்து வருகின்றனர். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions