மீண்டும் இணையும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' கூட்டணி!

Bookmark and Share

மீண்டும் இணையும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' கூட்டணி!

சந்தானம், பவர் ஸ்டார், சேது, விசாகா சிங், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2௦13-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'. ரூ.3 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.12 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. மேலும் சந்தானத்தின் ஹீரோ ஆசைக்கு வித்திட்ட படமாகவும் இது அமைந்தது.

தற்போது முழுநேர ஹீரோவாக மாறியிருக்கும் சந்தானம் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' புகழ் மணிகண்டன் இயக்கத்தில் சந்தானம் மீண்டும் ஒரு படம் நடிக்கவிருக்கிறார்.

முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் கூடிய பொழுதுபோக்கு படமாக இப்படத்தின் திரைக்கதையை இயக்குனர் மணிகண்டன் எழுதி வருகிறார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உட்பட பல்வேறு வெற்றிப்படங்களைத் தயாரித்த வாசன் விஷுவல் வெஞ்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்தபின் படத்தலைப்பை அறிவிக்க முடிவு செய்துள்ளனர். அக்டோபர் மாதம் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions