சந்தானம் பாணியில் முன்னேறும் மலையாள காமெடி நடிகர்..!

Bookmark and Share

சந்தானம் பாணியில் முன்னேறும் மலையாள காமெடி நடிகர்..!

'ஏபிசிடி' படத்தில் துல்கர் சல்மானோடு சேர்ந்து காமெடியில் அதகளம் பண்ணியவர் ஜேக்கப் கிரிகேரி.. அப்படியே துல்கருடன் இன்னொரு படமான 'சலாலா மொபைல்ஸ்' படத்திலும் நடித்திருந்தார்.

அதேபோல 1983 படத்தில்   கொஞ்ச நேரமே வந்தாலும் சச்சின் என பெயர் வைத்துக்கொண்டு தனது சேஷ்டைகளால் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார். குறிப்பாக  செத்துக்கிடக்கும் காகத்தை பார்த்து, இந்த ஊர்ல சாகுற காக்காய்கள் எல்லாம் ஷாக் அடிச்சுத்தான் சாகுதுங்க.. அப்படின்னா வயசாகி சாகுற காக்காய்கள்லாம் எங்க போய் சாகும் என செந்தில்தனமான கேள்வியை கேட்டு அசரவைப்பார்.

படிப்படியாக காமெடியில் முன்னேறி வரும் ஜேக்கப்பிறகு ஜாக்பாட் அடித்தது போல மோகன்லாலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருகிறது. லிங்கா படத்தில் ரஜினியுடன் இணைந்து சந்தானம் வருவது போல, மோகன்லாலுடன் படம் முழுக்க ட்ராவல் பண்ணும் கேரக்டராம்.

இந்தப்படத்தை இயக்கும் சத்யன் அந்திக்காடு தான், தான் இயக்கிய 'சினேக வீடு' படத்தில் நம்ம அப்புக்குட்டியை மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment

Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions