ஜூமாகா ஜூம் என்றால் என்ன?

Bookmark and Share

ஜூமாகா ஜூம் என்றால் என்ன?

ஓமகசீயா போன்ற அர்த்தமற்ற வார்த்தைகள் பாடல்களில் இடம்பெறுவதும்... அதன் அர்த்தம் புரியாமலே நாம் அதைப்பாடுவதும் வழக்கமான விஷயம்தான். இதை கிண்டல் பண்ணுவதுபோல் தமிழ்ப்படம் என்ற படத்தில், ஏற்கனவே வெளியான தமிழ்ப்பாடல்களில் இடம்பெற்ற ஓமகசீயா போன்ற அர்த்தமற்ற வார்த்தைகளை எல்லாம் தொகுத்து முழுப்பாடல் ஒன்றை உருவாக்கினார்கள்.

அந்தப்பாடலும் ஹிட்டானதோடு, தமிழ்ப்படத்தையும் வெற்றிப்படமாக்கியது.பாடல் வரிகளில் மட்டுமல்ல, வசனங்களிலும், படத்தின் தலைப்புகளிலும் கூட அர்த்தமற்ற வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

உதாரணத்துக்கு அண்மையில் தொடங்கப்பட்ட ஒரு படத்தின் பெயர் - அப்ரகடப்ராஓபன்திசே. தற்போது சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் இனிமே இப்படித்தான் படத்திலும் கூட ஒரு அர்த்தமற்ற வார்தையைப் பயன்படுத்தி உள்ளனர். அதாவது அப்படத்தில் அடிக்கடி ஜூமாகா ஜூம் என்று சொல்கிறார் சந்தானம்.

ஏற்கனவே அப்பாடக்கர் என்ற வார்ததையை சந்தானம் பயன்படுத்திய பிறகு அந்த வார்த்தையை படத்துக்கு டைட்டிலாக வைக்குமளவுக்கு பாப்புலர் ஆனது. அந்த வரிசையில் இப்போது - ஜூமாகா ஜூம்..! சீக்கிரம்போய் டைட்டிலை ரிஜிஸ்டர் பண்ணுங்கப்பா...! 

 


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions