தில்லுக்கு துட்டு என்ற படத்துக்கு தடை கேட்ட மனு தள்ளுபடி

Bookmark and Share

தில்லுக்கு துட்டு என்ற படத்துக்கு தடை கேட்ட மனு தள்ளுபடி

சென்னை 14-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில், ‘பேப்பர் பிளைட் பிக்சர்ஸ்‘ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மஸ்தான் சர்பூதீன் என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், எங்கள் நிறுவனம் ‘ஆவி பறக்க ஒரு கதை‘ என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்க முடிவு செய்து, பெரும் தொகையை செலவு செய்தது. இந்த படத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்ட ராம்பாலா என்பவர், இந்த படத்தை எடுப்பதற்கு காலதாமதம் செய்தார்.

இந்த நிலையில், இந்த படத்தின் கதையை ‘தில்லுக்கு துட்டு‘ என்ற பெயரில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு, ராம்பாலா இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வெளியானால், எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். அதனால், படத்தை வெளியிட தடைவிதிக்கவேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.அப்துல்மாலிக் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், நடிகர் சந்தானம், இயக்குனர் ராம்பாலா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.

இருதரப்பு வக்கீல்கள் செய்த வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.அப்துல்மாலிக், ‘தில்லுக்கு துட்டு‘ படத்துக்கு தடைகேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ‘தில்லுக்கு துட்டு’ என்ற திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions