நண்பர்களை அறிமுகப்படுத்தும் சந்தானம்

Bookmark and Share

நண்பர்களை அறிமுகப்படுத்தும் சந்தானம்

முன்பெல்லாம் சின்னத் திரையிலிருந்து சினிமாவுக்கு வருபவர்களுக்கு அவ்வளவு பெரிய மரியாதை கிடைக்காது. அவர்களை சீரியல் நடிகர்கள் என்றுதான் ஒதுக்கி வைப்பார்கள்.

ஆனால், இன்று டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் பலர் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தானம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் இன்று தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத நட்சத்திரங்கள்.

சந்தானம் ஏற்கெனவே சொந்தமாகப் படம் தயாரிக்க ஆரம்பித்து விட்டார், சிவகார்த்திகேயன் விரைவில் தயாரிப்பாளராக ஆக உள்ளார். சந்தானம் தயாரிப்பாளராக மாறிய பின் பல புதியவர்களை அறிமுகப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

'இனிமே இப்படித்தான்' படத்தில் அவருடைய நண்பர்களான முருகன், பிரேம் ஆனந்த் ஆகியோரை இயக்குனர்களாக அறிமுகப்படுத்துகிறார். முருகானந்த் என்ற பெயரில் இயக்குனர்களாக அறிமுகமாகும் இவர்கள் சந்தானம் நடித்துள்ள பல படங்களுக்கும், சந்தானம் விஜய் டிவியில்  'லொள்ளு சபா' நிகழ்ச்சியில் நடித்த போது ஸ்கிரிப்ட் எழுதியவர்கள்.

இந்தப் படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன் ஆகியோரையும் அறிமுகப்படுத்துகிறார்.

அதோடு அடுத்தடுத்து அவருடைய குழுவில் உள்ள பலரையும் இயக்குனராக அறிமுகப்படுத்த உள்ளேன் என சந்தானம் இன்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது தெரிவித்தார்.

சந்தானம் பேசுவதுடன் மட்டுமல்லாது செய்தும் காட்டுபவர் என்று அவருடைய நட்பு வட்டாரங்கள் அவரை 'நண்பேன்டா' என பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள். 


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions