எனது நடிப்பில் யாருடைய சாயலும் இருக்காது - சந்தானம்!

Bookmark and Share

எனது நடிப்பில் யாருடைய சாயலும் இருக்காது - சந்தானம்!

காமெடியன்களுக்கு பாடிலாங்குவேஜ் முக்கியம். அவர்கள் திரையில் வந்தாலே ரசிகர்களுக்கு சிரிப்பு வர வேண்டும் என்பார்கள்.

ஆனால், அப்படி எந்த பாடி லாங்குவேஜூம் இல்லாமல் டயலாக் பேசியே ரசிகர்களை சிரிக்க வைத்தவர் கவுண்டமணி. அவர் பாணியில் சந்தானமும் டயமிங் காமெடி மூலம் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.

இதற்கு முக்கிய காரணம், அவருக்குப்பின்னால் ஒரு பெரிய காமெடி இலாகாவே உள்ளது. அவர்கள்தான் சந்தானம் எந்த படத்தில் நடித்தாலும் அவருக்கான காட்சிகளை எந்த இடத்தில் எந்தமாதிரியான டயலாக்குடன் காட்சியை வைக்கலாம் என்று விவாதம் செய்து காட்சியமைக்கிறார்களாம்.

அந்த வகையில், நான் பேசும் ஒவ்வொரு டயலாக்கையும் எனக்கு பின்னாடி இருக்கிற காமெடி டீம்தான் உருவாக்கித்தருகிறார்கள். அதைத்தான் நான் பேசி நடிக்கிறேன் என்று சந்தானமே தற்போது ஓப்பனாக கூறி வருகிறார்.

அதோடு, இதுவரை நான் காமெடியில் யாரையும் இமிடேட் செய்யவில்லை என்று கூறிவந்த அவர் சமீபகாலமாக கவுண்டமணியின் காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் என்னையுமறியாமல் அவரது பாணி எனது நடிப்பில் இருப்பதில் ஆச்சர்யமில்லை என்கிறார்.

மேலும், இப்படி காமெடியில் மற்ற காமெடியன்களின் சாயல் தனது நடிப்பில் இருந்தாலும், ஹீரோ வேசத்தைப் பொறுத்தவரை யாருடைய சாயலும் இல்லாமல் எனக்கென ஒரு பாணியை பின்பற்றுவேன் என்று கூறும் சந்தானம், தனது நடிப்பில் யாருடைய சாயலும் தெரிந்தால் அதை கண்டுபிடித்து சரி செய்துகொள்வதற்கும் தனது காமெடி இலாகாவை உஷார் பண்ணி வைத்திருக்கிறார்.

 


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions