சந்தானம் ஜெயிச்சுட்டாரு, வடிவேலு ஜெயிப்பாரா ?

Bookmark and Share

சந்தானம் ஜெயிச்சுட்டாரு, வடிவேலு ஜெயிப்பாரா ?

தமிழ்த் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக தங்களது நகைச்சுவை நடிப்பில் கொடி கட்டிப் பறந்த சந்தானம், வடிவேலு இருவருமே ஹீரோவாக நடித்த படங்கள் கடந்த ஆண்டு வெளிவந்தன.

சந்தானம் நாயகனாக நடித்த  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படமும், வடிவேலு நாயகனாக நடித்த  தெனாலிராமன் படமும் வெளிவந்து தோல்வியைத் தழுவின. வடிவேலு நாயகனாக நடித்த  இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் மட்டுமே வடிவேலு நாயகனாக நடித்து வெற்றி பெற்ற படமாக அமைந்தது.

அதன் பின் அவர் நாயகனாக நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படமும் தோல்வியைத்தான் தழுவியது. சந்தானம் நாயகனாக நடித்த அறை எண் 305ல் கடவுள் படமும் தோல்விதான் அடைந்தது. ஆனால், மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்த  கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெற்றி பெற்றது.

அதையடுத்துத்தான் சந்தானம் தனி நாயகனாக  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்தார். இந்தப் படம் கடந்த வருடம் மே மாதம் வெளிவந்தது.

வடிவேலு நாயகனாக நடித்த  தெனாலிராமன் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளிவந்தது. மிகவும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த அந்தப் படங்கள் தோல்வியைத் தழுவியதால், அடுத்த ரவுண்டுக்கு வடிவேலுவும், சந்தானமும் தயாரானார்கள்.

இந்த ரவுண்டில் சந்தானம் நடித்து வெளியான  இனிமே இப்படித்தான் படம் நேற்று வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த ரவுண்டில் சந்தானம் ஜெயித்து விட்டார். வடிவேலு நாயகனாக நடித்துள்ள எலி படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அடுத்து வடிவேலுவும் இந்த ரவுண்டில் ஜெயிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions