சீரியஸாகும் சந்தானம்!

Bookmark and Share

சீரியஸாகும் சந்தானம்!

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு ஒரு காமெடியனாக சினிமாவில் இடம்பிடித்த சந்தானம் வந்தவேகத்தில் அவர் வேகமாக வளர்ந்து நின்றார். அதோடு அவரது காமெடிக்கு இருந்த வரவேற்பு காரணமாக பல படங்களில் ஹீரோக்களுக்கு இணையான வேடங்களில் நடித்தார் சந்தானம். 

அப்படி நடித்த படங்கள் வெற்றி பெற்றதைப்பார்த்த சந்தானத்துக்கு, ஏன் நாமே ஹீரோவாக நடிக்கக்கூடாது என்ற ஆசை ஏற்பட்டதன் காரணமாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவானார்.

ஆனால் அந்த படத்தின் அதிர்ச்சி தோல்விக்கு பின் உடனடியாக இனிமே இப்படித்தான் என்றொரு கதையை ரெடி பண்ணி தானே சொந்தமாக தயாரித்து நடித்தார் சந்தானம். 

அந்த கதையில் காமெடி கலந்து கருத்து சொன்னதால் வெற்றி பெற்றது. அதனால் நல்ல படங்களை கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை சந்தானத்துக்கு ஏற்பட்டது.

விளைவு, இப்போது சந்தானமும் முழு நேர ஹீரோவாகி விட்டார். அந்தவகையில், அடுத்து ராம் பாலா என்ற புதியவர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சந்தானம். 

இந்த படத்தில் தனது வழக்கமான தோற்றத்தில் இருந்து விடுபட்டு தாடி வைத்து நடிக்கிறார். அதோடு, சிரிப்பு நடிகராக ரசிகர்களின் மனதில் பதிந்து விட்ட அவர், இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளிலும் நடித்து சீரியஸ் நாயகனாகவும் உருவெடுக்கவுள்ளார்.


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions