சந்தானத்தின் அடுத்த படத்தில் முன்னணி ஹீரோயினியாம்!

Bookmark and Share

சந்தானத்தின் அடுத்த படத்தில் முன்னணி ஹீரோயினியாம்!

வல்லவனுக்கு புல்லும்ஆயுதம் படத்தை அடுத்து இனிமே இப்படித்தான் படத்திலும் நாயகனாக நடித்தார் சந்தானம். இந்த படம் தற்போது நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் தன்னாலும் ஹீரோவாக நிலைக்க முடியும் என்கிற நம்பிக்கை சந்தானத்துக்கு முன்பைவிட அதிகமாகியிருக்கிறது.

அதனால், இனிமே இப்படித்தான் படத்தில் நடித்து வந்தபோது, இந்த டைட்டிலைப்பார்த்து இனிமேல் நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்பதை சொல்லத்தான் இந்தமாதிரி டைட்டில் வைத்திருப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். எனக்கு பிடித்த மாதிரி காமெடி ரோல் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றும் சொன்னார். ஆனால், இப்போது அவரை யாருமே காமெடியன் வேடத்துக்கு தொடர்பு கொள்ளவில்லையாம். சந்தானமே நடிக்க தயாராக இருந்தபோதும், ஹீரோவாகி விட்ட அவரை எப்படி காமெடியனாக நடிக்க கேட்க முடியும் என்று சூரி உள்ளிட்ட காமெடியன்களையே தேடிச்செல்கிறார்கள்.

ஆக, தற்போது ஆர்யாவுடன் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் நடித்து வரும் சந்தானம், தான் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தின் கதை விவாதத்தையும் தொடங்கிவிட்டாராம். மேலும், முதல் இரண்டு படங்களிலுமே ஆஷ்னா சாவேரியை நாயகியாக நடிக்க வைத்த அவர், தனது மூன்றாவது படத்தில் முன்னணி ஹீரோயினிகளை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

ஒருவேளை, காமெடியனுடன் எப்படி நடிப்பது என்று இங்குள்ள மேல்தட்டு ஹீரோயினிகள் தயங்கினால் பாலிவுட்டில் இருந்து அங்குள்ள முன்னணி நடிகைகளை இறக்குமதி செய்யும் தயாராகி விட்டாராம் சந்தானம்.


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions