சந்தானம் படத்தில் தேசிய விருது நடிகர் சௌரப் சுக்லா

Bookmark and Share

சந்தானம் படத்தில் தேசிய விருது நடிகர் சௌரப் சுக்லா

தமிழில் ‘அந்நியன்’ படத்தில் விக்ரம்,  அட்டைப் பூச்சியை வைத்து ஒரு தொழிலதிபரை கொலை செய்வார். அந்த தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்தவர் இந்தி நடிகர் சௌரப் சுக்லா. 

பிரபல இந்தி நடிகரான, இவர் இந்தியில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகூட கிடைத்துள்ளது. இந்தியில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், தமிழ் என தென்னிந்திய மொழிப் படங்களில் சௌரப் சுக்லா நடித்துள்ளார். 

இந்தியில் நிறைய படங்களில் நடித்துள்ள சௌரப் சுக்லா, தமிழில் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘அந்நியன்’, ‘டேவிட்’ என குறிப்பிட்ட படங்களே நடித்துள்ளார். இந்நிலையில், சந்தானம் நடிக்கும் புதிய படத்தில் சௌரப் சுக்லா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

சந்தானம் தற்போது ‘லொள்ளுசபா’ இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில்தான் சௌரப் சுக்லா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறராம். 

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மும்பை மாடல் சான்யா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். திகில் கலந்த காமெடி படமாக இது உருவாகிறது.


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions