மெலோடி பாடல் கேட்ட சந்தானம்!

Bookmark and Share

மெலோடி பாடல் கேட்ட சந்தானம்!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்தபோது அப்படத்தை தயாரித்தது பெரிய நிறுவனம் என்பதால் கதையைக்கேட்டு நடிப்பதோடு தனது எல்லையை நிறுத்திக்கொண்டார் சந்தானம்.

ஆனால், இப்போது நடித்துள்ள இனிமே இப்படித்தான் படத்தில் ஒவ்வொரு விசயமும் சந்தானத்தின் ஆலோசனையின் பேரில்தான் நடைபெற்றுள்ளதாம். அதாவது, படத்தின் கதை மற்றும் காமெடிகளுக்கென மூன்று டீம் உருவாக்கி வைத்திருக்கும் சந்தானம், அவர்கள் சொல்லும் ஒவ்வொரு காட்சியையும் தனது பார்வைக்கு வந்த பிறகே ஓகே செய்திருக்கிறார்.

அதோடு, பாடல்கள் விசயத்தில் அதிக ஈடுபாடு காட்டினாராம். அதனால் ஸ்பாட்டில் இருக்கும்போதே அவருக்கு டியூன்கள் அனுப்பப்பட்டு அவருக்கு பிடித்தமானதை மட்டுமே பாடல் பதிவு செய்திருக்கிறார்களாம்.

அந்த வகையில், 5 டியூன்களையும் இசையமைப்பாளர் குத்துப்பாட்டு ரேஞ்சுக்கு போட்டு விட்டதால், ஒரு டூயட் பாடல் கண்டிப்பாக மெலோடியாக வேண்டும் என்று கேட்டு வாங்கியிருக்கிறாராம் சந்தானம்.

அந்த பாடலில் அவரும் ஆஷ்னா சவேரியும் ரொமான்டிக்காக நடனமாடியிருக்கிறார்களாம். அதனால் இந்த டூயட் பாடல் காமெடி நடிகர் என்ற இமேஜை விட்டு தன்னை ஹீரோ இமேஜ்க்கு மாற்றி விடும் என்றும் எதிர்பார்க்கிறாராம் சந்தானம்.


Post your comment





Related News
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions