தேனாண்டாள் பிலிம்ஸைத் தேடி வந்த சந்தானம்...!

Bookmark and Share

தேனாண்டாள் பிலிம்ஸைத் தேடி வந்த சந்தானம்...!

காமெடி நடிகராக நடித்துக் கொண்டிருந்த சந்தானத்துக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை வந்தபோது, அவருக்கு உற்சாகமூட்டியவர்களில் மறைந்த இயக்குநர் ராமநாராயணும் ஒருவர்.

அது மட்டுமல்ல, எடுத்த எடுப்பிலேயே ஹீரோவாக நடிப்பதைவிட டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடித்து ரசிகர்களின் பல்ஸ் பார்த்து அடுத்த படத்தில் ஸோலோ ஹீரோவாக நடிப்பது நல்லது என்று அட்வைஸும் செய்தாராம்.

அதை வேதவாக்காக எடுத்துக்கொண்ட சந்தானம், சேது என்பவரை ஹீரோவாக வைத்துக் கொண்டு அவருக்கு நிகரான வேடத்தை தனக்கு ஒதுக்கிக்கொண்டு ஆரம்பித்த படம்தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா.

சந்தானம் இந்தப்படத்தைத் தயாரித்தபோது அவருக்கு சினிமா வியாபாரம் கொஞ்சமும் தெரியாது. எனவே ராமநாராயணனை அணுகினார். அவரது வேண்டுகோளை தட்ட முடியாமல் தானே தயாரிக்கும் படம்போல் எல்லாவகையிலும் உடனிருந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தைத் தயாரித்துக் கொடுத்ததோடு, அந்தப் படத்தை உலகம் முழுக்க வெளியிடவும் செய்தார்.

அதன் பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்த சந்தானம் அந்தப் படத்தை பிவிபி நிறுவனத்துக்குக் கொடுத்தார். அடுத்து நடித்த இனிமே இப்படித்தான் படத்தை உதயநிதியிடம் கொடுத்து தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்தார்.

அந்தப் படத்தின் வரவு செலவு விவகாரத்தில் உதயநிதிக்கும் சந்தானத்துக்கும் மன வருத்தம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தான் ஹீரோவாக நடிக்கும் அடுத்தப் படத்தை தயாரிக்கும்படி மீண்டும் ராமநாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸைத் தேடி வந்திருக்கிறார் சந்தானம்...!

 


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions