தன் பெயரில் இணையதளம் தொடங்கிய சந்தானம்

Bookmark and Share

தன் பெயரில் இணையதளம் தொடங்கிய சந்தானம்

தமிழின் முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் பெயரில் சொந்தமாக இணையதளம் தொடங்கி, அதில் தங்கள் படங்கள் பற்றிய செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டு வந்தனர்.

ஆனால், தற்போது டுவிட்டர், பேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்கள் ரசிகர்களிடம் இவர்களை நேரடியாக கொண்டு செல்வதால், தற்போது இணையதளத்திற்கு கல்தா கொடுத்துவிட்டு, டுவிட்டர், பேஸ்புக் வலைத்தளங்களில் இணைந்துவிட்டனர்.

இந்நிலையில், மற்றவர்களை விட வித்தியாசமானவர் என்பதை நிரூபிக்கும் வகையில், காமெடி நடிகர் சந்தானம் தற்போது தனது பெயரில் சொந்தமாக இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளார். 

www.actorsanthanam.com என்ற முகவரி கொண்ட இந்த இணையதளத்தில், சந்தானம் நடிக்கும் படங்கள், வெளிவந்த படங்கள், சந்தானம் படத்தை பற்றிய செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

மேலும், சந்தானம் சொந்தமாக தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படங்கள் பற்றிய விவரங்களையும் இந்த இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார். இனி, சந்தானம் மற்றும் அவருடைய படங்கள் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்கள் நேரடியாக இந்த இணையதளத்திற்கு சென்று அவற்றை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம்.


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions