பேரும் புகழையும் தந்தவருக்கு சந்தானம் செய்த பேருதவி

Bookmark and Share

பேரும் புகழையும் தந்தவருக்கு சந்தானம் செய்த பேருதவி

தான் பிரபலமாவதற்கு முன் தனக்கு உதவிய யாரையும் சந்தானம் மறப்பதே இல்லை. மாறாக அவர்களை தன்னுடன் வைத்துக் கொண்டு சம்பளம் கொடுத்து வருகிறார். தற்போது அவருக்கு காமெடி ட்ராக் எழுதும் அனைவருமே அவரது நண்பர்கள். இந்தவரிசையில் தனக்கு பேரும் புகழையும் கொடுத்த, 'லொள்ளு சபா' டிவி நிகழ்ச்சியின் இயக்குநருக்கும் பேருதவி புரிந்திருக்கிறார் சந்தானம்.

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் புதிய படம் இனிமே இப்படித்தான். 'லொள்ளு சபா' டிவி நிகழ்ச்சியின் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்ற முருகானந்தத்துக்கு இப்படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் சந்தானம்.

இனிமே இப்படித்தான் படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. சந்தானத்தின் ஜோடியாக அஸ்னா மற்றும் அகிலா கிஷோர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். 'இனிமே இப்படித்தான்'  படத்தைத் தொடர்ந்து மற்றொரு படத்திலும் சந்தானம் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.  

'இனிமே இப்படித்தான்' படத்தை முடித்துவிட்டு, உடனடியாக புதிய படத்தை தொடங்கவும் திட்டமிட்டு இருக்கிறார் சந்தானம். இதற்கிடையில், காமெடியனாக உதயநிதியுடன்  நடிக்கும்  'நண்பேன்டா', ஆர்யாவுடன் நடித்திருக்கும் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க'  படங்களையும் சந்தானம் முடித்து கொடுத்திருக்கிறார்.


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions