சர்வர் சுந்தரம் படத்திற்காக பால் காய்ச்சினார் சந்தானம்!

Bookmark and Share

சர்வர் சுந்தரம் படத்திற்காக பால் காய்ச்சினார் சந்தானம்!

ஒரு விசயத்தை புதிதாகத் துவங்கும் போது அங்கே பல அனுகூலமான நிகழ்வுகள் நடப்பது மகிழ்வான விஷயம்.

ஒரு படத்தின் படப்பிடிப்பை முதல் முதலாகத் துவங்கும்போது எடுக்கப்படும் முதல் ஷாட், மிக முக்கியத்துவம் பெறுகிறது. எனவேதான் முதல் ஷாட்டாக என்ன எடுக்கலாம் என்பது பற்றி பலவிதமான சிந்தனைகளும் கருத்துகளும் விவாதிக்கப்படுவது இயல்பாக இருக்கிறது.

அந்த வகையில் சர்வர் சுந்தரம் படத்துக்கு எடுக்கப்பட்ட முதல் ஷாட்டை விட சிறப்பாக வேறு எந்தக் ஷாட் இருக்கமுடியும்?

சர்வர் சுந்தரமாக நடிக்கும் சந்தானம் பால் காய்ச்சும் ஷாட் முதலில் எடுக்கப்பட, அட்டகாசமாகத் துவங்கியது சர்வர் சுந்தரம் படப்பிடிப்பு.

சர்வர் சுந்தரமாகவே மாறி நின்ற சந்தனம் “இந்த உடையில் நிற்கும்போது நான் என்னை ஒரு உண்மையான சமையற்காரன் போலவே உணர்கிறேன்.” என்றார்.

அதைக் கேட்ட இயக்குனர் ஆனந்த் பால்கி “நடிகர் சந்தானத்தை சர்வர் சுந்தரமாகப் பார்க்கும்போது, முன்னர் நான் ஒரு ஹோட்டலில் நிர்வாக சமையற் கலைஞராக பணியாற்றியது எனக்கு நினைவுக்கு வருகிறது” என்றார்.

இப்படியாக, வழக்கமாக ஒரு படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் இருக்கும் பதட்டம் எதுவும் இல்லாமல், படக் குழுவே கண்ணில் நீர் வரும் அளவுக்கு சிரித்துக் குவித்தபடி பணி செய்தது.

இந்தப் படத்தில் பிஜேஷ் என்பவர் இரண்டாம் கதாநாயகனாக நடிப்பது சந்தோஷமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம். எந்த வகையில்?

1964 ஆண்டு வெளிவந்த உண்மையான காவியமான சர்வர் சுந்தரம் படத்தில், நம்மால் என்றும் மறக்க முடியாதபடி சிறப்பாக நடித்த நகைச்சுவை மாமன்னன் அமரர் நாகேஷ் அவர்களின் மூத்த பேரன்தான் இந்த பிஜேஷ்.

தயாரிப்பாளராக கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார், இசை அமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், இயக்குனராக ஆனந்த் பால்கி ஆகியோர், தேவையான சமையல் பொருட்களாக மாறி சமைக்கப்படும் இந்த சர்வர் சுந்தரம் என்ற சினிமா விருந்து, எல்லோருக்கும் ருசியாக அமையும்.

 


Post your comment

Related News
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions