தில்லுக்கு துட்டு படத்துக்கு தடை- சந்தானம் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!

Bookmark and Share

தில்லுக்கு துட்டு படத்துக்கு தடை- சந்தானம் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!

முகமது மஸ்தான் சர்பூதீன் இவர் ‘பேப்பர் பிளைட் பிக்சர்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர். சென்னை 14-வது சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் நிறுவனத்தின் சார்பில், ‘ஆவி பறக்க ஒரு கதை’ என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்க முடிவு செய்தோம். இந்த படத்தின் இயக்குனராக ராம்பாலா என்பவரை நியமிக்கப்பட்டார். அதற்காக ரூ.11 லட்சம் சம்பளம் பேசி, ரூ.3 லட்சம் அவருக்கு முன்தொகையும் கொடுக்கப்பட்டது.

இந்த படத்தின் கதை விவாதம் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் முதல் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடந்தது. இதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்தேன்.

இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சிவா, கதாநாயகியாக நடிகை நந்திதா ஆகியோரை தேர்வு செய்து, அவர்களுக்கும் முன்தொகையாக பல லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.

இந்த படத்தின் தலைப்பை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில் கடந்த மார்ச் 12-ந் தேதி பதிவு செய்துள்ளேன். ஆனால், இந்த படத்துக்கான சூட்டிங் செல்ல இயக்குனர் ராம்பாலா முன்வரவில்லை. எந்த ஒரு சரியான காரணங்களையும் கூறாமல், அவர் இழுத்து அடித்து வந்தார். இந்த படத்துக்காக இதுவரை ரூ.81 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளேன்.

இந்த நிலையில், நடிகர் சந்தானத்துடன், இயக்குனர் ராம்பாலா கைகோர்த்து, என்னுடைய ‘ஆவி பறக்க ஒரு கதை’ படத்தின் கதையை, ‘தில்லுக்கு துட்டு’ என்ற தலைப்பில் எடுத்துள்ளனர். இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த தகவல் கிடைத்ததும், சந்தானத்துக்கு போன் செய்து விவரம் கேட்டேன். அப்போது, தில்லுக்கு துட்டு படத்தின் இயக்குனர் ராம்பாலா இல்லை என்று அவர் பதிலளித்தார். ஆனால், தற்போது வெளியான விளம்பரத்தில் ராம்பாலா பெயர் இருந்தது. இதுகுறித்து மீண்டும் சந்தானத்திடம் கேட்டபோது, ‘உன்னால் என்ன செய்ய முடியுமோ? அதை செய்’ என்று கூறியது மட்டுமல்லாமல், மிரட்டலும் விடுத்தார்.

இதுகுறித்து கடந்த ஏப்ரல் மாதம் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது, சந்தானமும், ராம்பாலாவும் வராமல் இழுத்து அடித்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில், அவர்கள் தங்களது பணம் பலத்தினால், இந்த படத்தை விரைவில் வெளியிட உள்ளனர். அந்த படத்தின் ஆடியோ கேசட் இன்று (நேற்று) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படம் வெளியானால், எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ‘தில்லுக்கு துட்டு’ என்ற படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும் இதையடுத்து நீதிபதி, ‘மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக வருகிற 28-ந் தேதி இயக்குனர் ராம்பாலா, நடிகர் சந்தானம் ஆகியோர் நேரில் ஆஜராகவேண்டும்’ என்று நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions