பாண்டிச்சேரியில் முகாமிட்ட சந்தானம்!

Bookmark and Share

பாண்டிச்சேரியில் முகாமிட்ட சந்தானம்!

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் கொடுத்த நம்பிக்கையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்தார் சந்தானம். அதுவும் தெலுங்கில் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான மரியாதை ராமன்னா தெலுங்கு படத்தின் ரீமேக் என்பதால், பெரிய அளவில் எதிர்பார்த்தார் சந்தானம்.

ஆனால், படம் சுமாராக ஓடியது. ஆனபோதும் காமெடியனான சந்தானம் மற்ற இளவட்ட ஹீரோக்களுக்கு இணையாக தனது பாடிலாங்குவேஜை மாற்றி பாடல் காட்சிகளில் சிறப்பாக நடனமாடியிருந்தார். அதுதான் அவரை ஹீரோவாக பாஸ் பண்ண வைத்தது.

ஆனால், அந்த படத்தை தயாரித்த பிவிபி பட நிறுவனம் சந்தானம் நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தையும் தாங்களே தயாரிப்பதாக முன்பு சொல்லி வந்த நிலையில், படம் கையை கடித்து விட்டதால் பின்னர் கழன்று கொண்டனர்.

அதனால் உடனடியாக ஹீரோவாக நடிக்க முடியாத நிலையில், சில படங்களில் காமெடியனாக நடித்த சந்தானம், அடுத்து தன்னைத்தானே மீண்டும் ஹீரோவாக நிலைநிறுத்தும் முயற்சிகளில் இறங்கி இப்போது சத்தமில்லாமல் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் சென்னையில் படப்பிடிப்பு நடத்தி வந்த சந்தானம், இப்போது பாண்டிச்சேரியில் முகாமிட்டுள்ளார். சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் அங்குதான் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

அதனால், தான் நடிக்கும் கதாபாத்திரம் படம் வெளிவருவதற்கு முன்பே வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதற்காக வெளியாட்கள் யாரையும் ஸ்பாட்டுக்குள் நுழைய விடாமல் சீக்ரெட்டாக படப்பிடிப்பு நடத்தி வருகிறார் சந்தானம்.


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions