ஆஷ்னா சவேரிக்கு மீண்டும் கைகொடுப்பாரா சந்தானம்?

Bookmark and Share

ஆஷ்னா சவேரிக்கு மீண்டும் கைகொடுப்பாரா சந்தானம்?

சந்தானம் நாயகனாக நடித்த முதல் படமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்காக புனேயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் ஆஷ்னா சாவேரி. அப்படி அவர் சந்தானத்துடன் நடித்த முதல் படம் ஹிட்டானது. அதையடுத்து சந்தானத்தின் இரண்டாவது படமான இனிமே இப்படித்தான் படத்திலும் நாயகியாக நடித்தார் ஆஷ்னா. அந்த படமும் ஹிட்டடித்தது. ஆக, சந்தானத்தைப் பொறுத்தவரை ராசியான ஜோடியாகி விட்டார் ஆஷ்னா.

இந்நிலையில், முதல் படத்தில் நடித்த பிறகு அவர்களைப்பற்றிய கிசுகிசு செய்திகள் கொளுந்துவிட்டு எரிந்தன. இருப்பினும், இரண்டாவது படத்திலும் ஆஷ்னாவையே நடிக்க வைத்தார் சந்தானம்.

அதோடு, கிசுகிசுக்கள் உறுதியாகி விடக்கூடாது என்பதற்காக, மொத்த படத்தில் நடிக்கவும் ஒரே நேரத்தில் கால்சீட் கேட்டால் முன்னணி நடிகைகள் தரமாட்டார்கள். ஆனால் ஆஷ்னா ஒரே கால்சீட் கொடுத்ததால் நடிக்க வைத்தேன் என்று சந்தானமே முன்னெச்சரிக்கையாக சொல்லி இந்த முறை கிசுகிசுவில் இருந்து தப்பித்துக்கொண்டார்.

இந்த நிலையில், மீண்டும் ஹீரோவாக நடிப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கும் சந்தானத்தின் புதிய படத்திலும் நாயகியாகி விட வேண்டும் என்று கல்லெறிந்து வருகிறாராம் ஆஷ்னா சவேரி.

ஆனால் மூன்றாவது படத்திலும் அவரையே நடிக்க வைத்தால் ஏற்கனவே கிசுகிசு பரப்பியவர்கள் இன்னும் எண்ணெய் ஊற்றி எறிய வைப்பார்கள் என்று ஆஷ்னாவை கண்டுகொள்ளாமல் இருக்கிறாராம் சந்தானம்.


Post your comment





Related News
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
இயக்குனர்களுக்கு தொல்லை கொடுக்கும் சந்தானம் நாயகி
ஒரு தியேட்டரை மையப்படுத்தி உருவாகும் நாகேஷ் திரையரங்கம்!
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பயணித்த சந்தானம் நாயகி
சந்தானத்துடன் நடிக்க எந்த நாயகியும் ஒப்புக்கொள்வார்கள்: ஆஷ்னா சவேரி
சந்தானத்தின் மீது ஆஷ்னா ஜாவேரி வருத்தம்!
ஆஷ்னாசாவேரிக்கு ஆர்யா கொடுத்த வாக்குறுதி!
சென்டிமென்டை உடைக்கும் ஆஷ்னா சாவேரி!
மீண்டும் சொந்த தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions