தியேட்டர்கள் அதிகரிப்பு : உற்சாகத்தில் சந்தானம்

Bookmark and Share

தியேட்டர்கள் அதிகரிப்பு : உற்சாகத்தில் சந்தானம்

சந்தானம் தயாரித்து நடித்துள்ள "இனி்மே இப்படித்தான்" படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பெரும் உற்சாகத்தில் சந்தானம் உள்ளார்.

சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இனி்மே இப்படித்தான் படம், கடந்த 12ம் தேதி வெளியானது. 250 தியேட்டர்களில் இப்படம் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் அளித்த உற்சாக வரவேற்பின் காரணமாக, படங்கள் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

படத்திற்கு ரசிகர்கள் அளித்துள்ள உற்சாக வரவேற்பு மற்றும் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்டவைகளால், சந்தானம் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.
சந்தானம் தற்போது ஆர்யா உடன் வி.எஸ்.ஓ.பி, உதயநிதியுடன் ஒரு படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து, புதுமுக இயக்குநர் சேதுவின் இயக்கத்தில், புதுப்படத்தில் ஹீரோ கேரக்டரில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, ஜூலை மாத இறுதியில் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions