ஜெயம்ரவி இடத்தை பிடித்த சந்தானம்?

Bookmark and Share

ஜெயம்ரவி இடத்தை பிடித்த சந்தானம்?

‘தில்லுக்குத் துட்டு’  படத்தைத் தொடர்ந்து சந்தானத்தின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்திருக்கிறது. தற்போது ‘சர்வர் சுந்தரம்’  படத்தில் நடித்து வரும் சந்தானம் அடுத்ததாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ புகழ் மணிகண்டன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் கவுதம் மேனனின் புதிய படத்திலும் சந்தானம் ஹீரோவாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கால்ஷீட் பிரச்சினையால் சிம்புவை வைத்து இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’, தனுஷை வைத்து இயக்கிய ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’  என 2 படங்களையும் விட்டுவிட்டு தற்போது 4 ஹீரோக்கள் நடிக்கும் புதிய படத்தை கவுதம் மேனன் தொடங்கவிருக்கிறார்.

பிருத்விராஜ், புனித் ராஜ்குமார், சாய் தரண் தேஜ் என மற்ற மொழி ஹீரோக்களைத் தேர்வு செய்த கவுதம் மேனனுக்கு தமிழில் ஹீரோ கிடைப்பது கடினமாக இருந்தது. சமீபத்தில் ஜெயம் ரவி இப்படத்தில் நடிக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் கவுதம் மேனன் கேட்கும் தேதிகளில் ஜெயம் ரவியிடம் கால்ஷீட் இல்லை என்பதால் சந்தானத்தை இப்படத்தின் ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

நண்பர்கள் சேர்ந்து சுற்றுலா போவது போன்ற கதையென்பதால் சந்தானம் இப்படத்தின் கதைக்கு பொருந்துவார் என்பது கவுதம் மேனனின் எண்ணமாக உள்ளது. அனுஷ்கா, தமன்னா தவிர்த்து 3 வது ஹீரோயினுக்கான தேடலில் கவுதம் மேனன் தற்போது பிசியாக இருக்கிறார். இந்த வருட இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions