டைனோசரைக் கண்டு அச்சத்தில் சந்தானம்....

Bookmark and Share

டைனோசரைக் கண்டு அச்சத்தில் சந்தானம்....

சந்தானம் கதாநாயகனாக நடித்த இனிமே இப்படித்தான் படம் ஜூன் 12ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதே நாளில்தான்  லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்திருக்கும் 'ரோமியோ ஜூலியட்' படமும் ரிலீஸாகிறது.  

இந்த இரண்டு படங்களுமே ரொமான்டிக் காமெடிப் படங்களாக உருவாகியிருக்கின்றன.  குறிப்பாக, சந்தானம் நடிப்பில் முருகானந்த் இயக்கியிருக்கும் 'இனிமே இப்படித்தான்' படத்தில் காமெடி சற்று மேலோங்கி இருப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இனிமே இப்படித்தான், ரோமியோ ஜூலியட் இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் ஓரளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என தியேட்டர்காரர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், இந்த இரண்டு படங்களின் வசூலுக்கு வேட்டு வைப்பதுபோல், ஹாலிவுட் படமான 'ஜுராசிக் வேர்ல்டு' படம் ஜூன் 11ஆம் தேதி ரிலீஸாகிறது. 'ஜுராசிக் பார்க்' படம் ஏற்கெனவே 3 பாகங்களாக வெளிவந்து உலகம் முழுக்க பெரிய வசூலை அள்ளியது.  

இந்த பட வரிசையில் 4 ஆம் பாகமாக வெளிவரும் 'ஜுராசிக் வேர்ல்டு' படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இப்படமும்பெரிய அளவில்  வசூலில்  சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு,  இனிமே இப்படித்தான், ரோமியோ ஜூலியட் இரண்டு படங்களுக்கும் பலத்த போட்டியை உருவாக்கும் என்றும் தோன்றுகிறது.

ஜுராசிக் வேர்ல்டு ஹாலிவுட் படம்  தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிவருவதால் தமிழ்நாட்டில் உள்ள பி அண்ட் சி ஏரியாக்களிலும் ரோமியோ ஜூலியட், இனிமே இப்படித்தான் படங்களுக்கு நிச்சயம் பலத்த போட்டியாக இருக்கும் என்பது நிச்சயம். இந்தப் படத்தினால் தன் படத்துக்கு ஆபத்து வருமோ என்ற அச்சத்தில் இருக்கிறாராம் சந்தானம்.


Post your comment





Related News
உலகம் முழுவதும் பாகுபலி படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா- அதிர்ந்த திரையுலகம்
வேர்ல்டு ஹீரோ, நடிகை ஜோடியை பிரித்தது யார் தெரியுமா?
இன்று உலகம் முழுவதும் 1000 அரங்குகளுக்கு மேல் பைரவா ரிலீஸ்!
உலகளவில் தோனியின் பிரம்மாண்ட வசூல் எவ்வளவு தெரியுமா?
உலக திரைப்பட விழாவில் பங்கேற்கும் சூர்யா படம்
உலகம் முழுவதிலும் வசூலில் தனி வரலாறு படைத்த கபாலி!
87 ஆண்டுகளுக்கு முந்தைய டிஸ்னி திரைப்படம் கண்டுபிடிப்பு
தமிழ்ப் படங்களை மிஞ்சும் ஜுராசிக் வேர்ல்டு!
ஜுராசிக் வேர்ல்டு படத்தின் உலக வசூல் சாதனை
பள்ளி குழந்தைகளுக்கு உலக இசை சினிமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions