சந்தானம் வெற்றிக்கு காரணம்

Bookmark and Share

சந்தானம் வெற்றிக்கு காரணம்

சந்தானம் நாயகனாக நடிக்கும் மூன்றாவது படம். இனிமே இப்படித்தான் இதனை இயக்குவது சந்தானத்தின் கூடவே பயணிக்கும் முருகன். பிரேம் ஆனந்த் என்கிற இருவர். படத்துக்காக முருகானந்த் ஆகியுள்ளனர். இவர்களில் முருகன் சந்தானம் ஊர்க் காரர்.

ஊரிலேயே சிறுவயது முதல் நண்பர் பிரேம் ஆனந்த் சந்தானத்துடன் விஜய்டிவியில் நண்பரானார். இந்த மூவரும் சகலை வெர்சஸ் ரகளை, லொள்ளு சபா என டிவி நிகழ்ச்சிகளில் இணைந்து செய்தார்கள். சந்தானம் நடிப்பில் பிரபலமானதும் அவரது குழுவினராக மாறினர்.

கதை விவாதம் வசனம் என்று எழுதி வந்தார்கள். அவர்களின் திறமையைப் பார்த்து சந்தானம் தன் படத்தின் இயக்குநர்களாக்கி விட்டார். இப்படிப்பட்ட வசனம் எல்லாம் எப்படி எழுதுகிறீர்கள் என்று பிரேம் ஆனந்திடம் கேட்ட போது ரூம் போட்டுத்தான் யோசிக்கிறோம் என்கிறார் .

அவர்கள் கதை விவாதக்குழுவில் முருகன், ஆனந்த் என்கிற இவர்கள் தவிர சேது, மாறன், உதய், குணா, சுந்தர் என்று ஏழுபேர் இருக்கிறார்கள். அப்ப.. ரூம்போட்டுத்தான் யோசிக்கிறார்கள்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions