சந்தானத்துடன் அடிக்கடி பேசும் நயன்தாரா

Bookmark and Share

சந்தானத்துடன் அடிக்கடி பேசும் நயன்தாரா

'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்திற்குப் பிறகு சந்தானம் நடிக்கும் 'இனிமே இப்படித்தான்' படத்தின் முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டது. சந்தானம் விஜய் டிவியில் 'லொள்ளு சபா' நிகழ்ச்சியில் நடித்துக் கொண்டிருந்த போது அவருடன் இணைந்து பணிபுரிந்த முருகானந்த் என்பவர்தான் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் சந்தானம் ஜோடியாக ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படம் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சந்தானம், அவருக்கும் நயன்தாராவிற்கும் உள்ள நட்பைப் பற்றிய சில உண்மைகளைத் தெரிவித்தார்.

“நான் நயன்தாராவுடன் இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் அவரிடம் அதிகமாகப் பேச மாட்டேன். ஏன், அவருடைய போன் நம்பர் கூட என்னிடம் இருந்ததில்லை.

'நண்பேன்டா' படத்தில் நடித்த போதுதான் அவர் சகஜமாகப் பேச ஆரம்பித்தார். அதன் பின்தான் என்னுடைன் தொலைபேசியிலும் பேசுவார். அவருக்கு ஏதாவது மனசு சரியில்லை என்றால் என்னிடம் தொலைபேசியில் பேசி அவருடைய டென்ஷனை குறைத்துக் கொள்வார் என்று சில பத்திரிகைகளில் ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தது.

அது முற்றிலும் உண்மையுமல்ல, முற்றிலும் பொய்யுமல்ல. சில சமயங்களில் அவர் என்னிடம் அப்படிப் பேசுவது உண்மைதான். ஆனால், பத்திரிகைகளில் வெளிவந்தது போல் அடிக்கடி எல்லாமோ, தினமுமோ பேச மாட்டார்,” என சந்தானம் தெரிவித்தார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions