நான் தயாரிக்கும் படங்களில் புது முகங்களுக்கு வாய்ப்பு: சந்தானம்

Bookmark and Share

நான் தயாரிக்கும் படங்களில் புது முகங்களுக்கு வாய்ப்பு: சந்தானம்

சந்தானம் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் ‘‘இனிமே இப்படித்தான்’’ படம் வருகிற 12–ந் தேதி வெளியாகிறது.

இதையொட்டி கோவை வந்த நடிகர் சந்தானம் நிருபர்களிடம் கூறியதாவது:–

‘இனிமே இப்படித்தான்’ படத்தை நான் சொந்தமாக தயாரித்து கதாநாயகனாக நடிக்கிறேன். நான் காமெடியனாக, கதாநாயகனாக, தயாரிப்பாளராக வந்து உள்ளேன். தற்போது ஒரு படம் தயாரித்து அதை வெளியிடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அந்த கஷ்டத்தை இந்த படத்தில் நான் அனுபவித்துள்ளேன். நான் தயாரிக்கும் படங்களில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன்.

நான் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. அது போன்று இதுவும் எனக்கு அமையும். ஒரு ஹீரோவோடு சேர்ந்து நடித்த உணர்வு ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்கும் போதுதான் எனக்கு ஏற்பட்டது.

காமெடியன் கதாநாயகன் ஆகலாம். ஆனால் படத்தில் நடனம் ஆடும்போது மட்டும் கவனம் தேவை. அது காமெடியாக இருந்து விடக்கூடாது ஆகவே அதற்காக நான் நிறைய பயிற்சி எடுத்து இந்த படத்தில் நடனம் ஆடி உள்ளேன். அதிக வசனம் இல்லாத, பேசாமல் காமெடி பண்ணும் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதற்காக நான் திட்டமிட்டு வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
விஜய் சும்மா நடந்து வந்தாலே போதும்- வளர்ந்து வரும் நாயகி புகழாரம்
காசுக்காக ரயிலில் பெட்டி, பெட்டியா போய் பாடிருக்கேன்: ஹீரோ ஓபன் டாக்
வேர்ல்டு ஹீரோ, நடிகை ஜோடியை பிரித்தது யார் தெரியுமா?
Mass Hero of the Year - மீண்டும் சாதித்த விஜய்! ரசிகர்கள் குதூகலம்
அப்படியே அவனுக்கும் ஒரு கேரக்டர்… தம்பிக்கும் சான்ஸ் பிடிக்கும் ஹீரோயின்
நாங்களும் ஹீரோ தான், கலக்கும் விஜய் சேதுபதி
அழகான அம்மாவால் அவஸ்தைக்குண்டான நடிகை!
இனிமேல் ஹீரோவாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்த வடிவேலு
தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா?: பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் பரபரப்பு பேச்சு
விமானத்தில் பைலட்டையே தெறிக்க விட்ட சூரியின் தாயார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions