சந்தானம் படத்தின் இசை பணியை முடித்த சந்தோஷ் தயாநிதி

Bookmark and Share

சந்தானம் படத்தின் இசை பணியை முடித்த சந்தோஷ் தயாநிதி

‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடித்து வரும் படம் ‘இனிமே இப்படித்தான்’. இதில் சந்தானத்திற்கு ஜோடிகளாக ஆஷ்னா சவேரி மற்றும் அகிலா கிஷோர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முருகானந்த் இயக்கியுள்ள இப்படத்தை சந்தானம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹேண்ட் மேட் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். 

இப்படத்தின் மூலம் சந்தோஷ் தயாநிதி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் ஏ.ஆர்.ரகுமானிடம் உதவியாளராக இருந்தவர். இவருடைய இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது. இதையடுத்து படத்தின் பின்னணி இசையில் தீவிரம் காண்பித்து வந்த சந்தோஷ் தற்போது பின்னணி வேலைகளையும் முடித்துள்ளார்.

இதுகுறித்து சந்தோஷ் கூறும்போது, ‘இனிமே இப்படித்தான் படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலையை முடித்து விட்டேன்.  படம் சூப்பராக வந்திருக்கிறது. பின்னணி இசையமைக்கும் போது முழுக்க முழுக்க உற்சாகமாக இருந்தது. நிச்சயம் இப்படம் ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருக்கும். இப்படம் ஜூன் 12ம் தேதி வெளியாகிறது.

படத்தை பார்த்து அனைவரும் மகிழ்ச்சியடைவீர்கள். எனக்கு இப்படத்திற்கு இசையமைக்கும் பணியை கொடுத்த சந்தானத்திற்கும், இயக்குனர் முருகானந்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
மீண்டும் புதுப்படத்துக்காக லைகாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ்
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி பட இயக்குனருக்கு ஓமன் நாட்டு மந்திரி பாராட்டு
மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்
ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions