நட்புக்காக நடித்துக்கொடுத்த சந்தானம்!

Bookmark and Share

நட்புக்காக நடித்துக்கொடுத்த சந்தானம்!

சந்தானம், சேது, பவர்ஸ்டார் ஆகியோர் இணைந்து நடித்த படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. இந்த படத்தில் நாயகனாக நடித்தவர் சேது. இவர் சந்தானத்தின் நீண்டகால நண்பர்.

நான் சினிமாவில் பெரிய நடிகராகி விட்டால் கண்டிப்பாக உன்னையும் நடிகராக்கி விடுவேன் என்று முன்பு கொடுத்த வாக்குறுதிக்காக அந்த படத்தில் சேதுவை தனது சிபாரிசின்பேரில் நடிக்க வைத்தார் சந்தானம்.

அப்படி அவர்கள் நடித்த அந்த படமும் மெகா ஹிட் ஆனது. அதனால் அடுத்தபடியாக சேது ஷோலோ ஹீரோவாகவே வாலிபராஜா என்ற படத்தில் நடித்தார். அதோடு கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகா சிங்கை நாயகியாக நடிக்க, சந்தானம் ஒரு டாக்டர் வேடத்தில் நட்புக்காக நடித்துக்கொடுத்திருக்கிறார்.

ஆனால் படம் முடிந்து பல மாதங்களாகியும் வியாபாரமாகவில்லையாம். இதனால் சந்தானம் நடித்த படம் வியாபாரமாகவில்லை என்றொரு கருத்து கோலிவுட்டில் நிலவியது. ஆனால், வாலிபராஜா படம் குறித்து சந்தானத்தைக்கேட்டால், அந்த படத்தில் நான் ஒரு சிறிய ரோலில்தான் நடித்திருக்கிறேன்.

அதை கெஸ்ட் ரோல் என்றுதான் சொல்ல முடியும். மற்றபடி அந்த படத்தைப்பற்றி எனக்கு வேறு எதுவும் தெரியாது என்கிறார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions