சந்தானத்திற்கு ஜோடியான ஷெரீன்..

Bookmark and Share

சந்தானத்திற்கு ஜோடியான ஷெரீன்..

'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமான தனுஷ் தேசிய விருது பெற்று ஹிந்தியிலும் நடிக்க ஆரம்பித்து இந்தியத் திரையுலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு உயரத்திற்குப் போய்விட்டார்.

ஆனால், அவருடன் 'துள்ளுவதோ இளமை' படத்தில் நாயகியாக அறிமுகமான ஷெரீன் சந்தானத்திற்கு ஜோடியாக சேரும் அளவிற்கு கீழே போய் விட்டார். 'நண்பேன்டா' படத்தில் ஒரு நான்கைந்து காட்சிகளில் மட்டுமே சந்தானத்தின் காதலியாக நடித்திருக்கும் ஷெரீனைப் பார்த்ததும் பல ஆண்டுகளாக படம் பார்க்கும் பக்கத்து சீட்டு காரர்களுக்கே அவரை அடையாளம் தெரியவில்லை.

எப்படி இருந்த ஷெரீன் இப்படி ஆகிட்டாரே என ஆச்சரியப்பட்டுப் போகிறார்கள். கடைசியாக 'உற்சாகம்' படத்தில் நாயகியாகவும், 'பீமா' படத்தில் 'ரங்கு ரங்கம்மா...' என்ற பாடலுக்கு அதிரடி ஆட்டம் போட்டு இளமையான நாயகியாக கவர்ந்திருப்பார்.

அப்படிப் பார்த்தவரை ஏழு ஆண்டு இடைவெளிக்குள் இப்படிப் பார்ப்பது வழக்கமான திரைப்பட ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. 'துள்ளுவதோ இளமை' படத்திற்குப் பிறகு தன்னுடைய வசீகரக் கண்களால் தமிழில் ஒரு முன்னணி நாயகியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் ஷெரீன்.

 பெங்களூரில் மாடலிங் செய்து கொண்டிருந்தவர் திரையுலகிற்கு அறிமுகமானவர் இப்போது சந்தானத்தின் ஜோடியாக மாறிவிட்டார். இப்படித்தான் கேரள அழகியாக இருந்து தமிழில் நாயகியாக அறிமுகமான சொர்ணா, 'ரோஜாக் கூட்டம்' படத்தில் விவேக் ஜோடியாகவும் ,  'சந்திரமுகி' யில் வடிவேலுவுக்கு ஜோடியாகவும் நடிக்க ஆரம்பித்து அதன் பின் காணாமலே போய்விட்டார்.

திரையுலகத்தில் வெற்றிக்கும், அழகிற்கும், ராசிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று அவர்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions