சந்தானம் படத்துக்கு இசையமைக்கும் சிம்பு – ஆச்சரிய தகவல்!

Bookmark and Share

சந்தானம் படத்துக்கு இசையமைக்கும் சிம்பு – ஆச்சரிய தகவல்!

தில்லுக்கு துட்டு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சந்தானத்தின் மார்கெட் ஏறுமுகத்தில் உள்ளது. தற்சமயம் சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும் படங்களில் நடித்துவரும் அவர் அடுத்ததாக அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்துக்கு ‘சக்கப்போடு போடு ராஜா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சந்தானத்தின் நண்பர் விடிவி கணேஷ் தயாரிக்கிறார். மேலும் சர்வர் சுந்தரம் படத்தில் ஹீரோயினாக நடித்த வைபவி சாந்தில்யா என்பவரே இந்த படத்திலும் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

நடிகர் விவேக் இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார்.இந்நிலையில் இப்படத்துக்கு நடிகர் சிம்பு இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இசையமைப்பாளராக சிம்பு அறிமுகமாகும் படம் இதுவேயாகும்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions