சந்தானம் அவுட்.. சூரி இன்... அரண்மனை - 2 அப்டேட்ஸ்

Bookmark and Share

சந்தானம் அவுட்.. சூரி இன்... அரண்மனை - 2 அப்டேட்ஸ்

சந்தானத்தை நடிக்க வைத்த ஒரே காரணத்துக்காக சுந்தர்.சி படத்தில் நடிக்க மறுத்தார் வடிவேலு. அவரை சமாதானப்படுத்த குஷ்பூ கூட முயற்சி செய்தார்.  அப்படியும் சுந்தர்.சி படத்தில் இனி நடிக்கவே மாட்டேன் வீம்பு பிடித்தார் வடிவேலு.

எந்த சுந்தர்.சி தனக்காக வடிவேலுவை பகைத்துக் கொண்டாரோ, அதே சுந்தர்.சியின் படத்தில் தற்போது நடிக்க மறுத்திருக்கிறார் சந்தானம். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் சுந்தர்.சி படங்களில் ஆரம்பத்தில் கவுண்டமணி, அதன்பிறகு வடிவேலு முக்கிய பங்காற்றினர்.

அதனைத் தொடர்ந்து சுந்தர்.சி எடுத்த  படங்களில்  சந்தானத்துக்கு  முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சுந்தர்.சி. இயக்கும் படங்களில் ஹீரோக்களுக்கு சமமான வேடம் முன்னணி காமெடியன்களுக்கு  ஒதுக்கப்பட்டிருக்கும். அதனாலேயே, காமெடியன்கள் சுந்தர்.சியின் படங்களில் நடிப்பதற்கு போட்டி போடுவார்கள்.

சந்தானம் ஹீரோவாக மாறிய பிறகும் கூட சுந்தர்.சி படம் என்பதால் 'அரண்மனை', 'ஆம்பள' போன்ற படங்களில் நடித்துக் கொடுத்தார்.  இப்போது சுந்தர்சி இயக்க உள்ள அரண்மனை - 2 படத்தில் சந்தானம் நடிக்க மறுத்ததால்,  'அரண்மனை'2ஆம் பாகத்தில் காமெடியனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் சூரி.

ஜூன் 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்தப் படத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார். த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா என 3 கதாநாயகிகள் இதுவரை ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.  'ஆம்பள' படத்தைத் தொடர்ந்து இப்படத்திற்கும் இசையமைக்கிறார் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி.

 


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions